கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 10, 2010

எந்த அம்மா குப்பை கொட்டினாலும் உதறிவிட்டு செல்ல வேண்டும்: கலைஞர்




திருச்சி சென்ற முதல்வர் கருணாநிதி, 08.09.2010 அன்று மாலை மறைந்த அன்பில் தர்மலிங்கம் சிலையை திறந்து வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:

இன்று காலையிலே இருந்து திருச்சி மாநக ரம் விழாக்கோலம் பூண்டு, அரசின் சார்பாக மக் களுக்குத் தேவையான திட்டங்களை வழங்கி, அந்தத் திட்டங்களை நிறைவேற்றக் கூடிய நிரு வாக நிலையங்களான மாவட்ட ஆட்சித் தலை வர் அலுவலகம், வட் டாட்சியர் அலுவலகம் போன்ற அலுவலகங் களை யெல்லாம் தொடங்கி வைத்து, கழகம் எந்த நிலையிலும் மக்கள் பிரச் சினைகளை மறக்காது. அவர்களுக்காக எதிர்க் கட்சியாக இருந்தாலும், அரசோச்சுகிற கட்சியாக இருந்தாலும் பாடுபடும், பணியாற்றும் என்பதை இந்த நாளில் திருச்சி மாநகரத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

நான் காலையிலே அரசு விழாவில் பேசும் போது குறிப்பிட்டேன். திருச்சி நகரத்திற்கும் - குறிப்பாக திருச்சி மாவட் டத்திற்கும் எனக்கும் உள்ள பொருத்தங்களை, உறவுகளை, தொடர்பு களை, நட்பினை, தோழமை உணர்வுகளை எடுத்துக் கூறினேன். ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல. நான் எத்தனை முறை திருச்சிக்கு வந்தாலும் பல்லாயிரக்கணக்கான - லட்சக்கணக்கான தமிழ்ப் பெருங்குடி மக் களை சந்திக்கக் கூடிய வாய்ப்பினைப் பெற்று வருகின்றேன்.

1960-களில் திராவிட முன்னேற்றக் கழகத்தி னுடைய பேச்சாளராக இருந்தபோது பராங்கு சத்தால் அழைக்கப்பட்டு, அன்பிலார் அவர்களால் அழைக்கப்பட்டு, நடரா ஜனால் அழைக்கப்பட்டு நான் திருச்சி நகரத்தில் பேசிய இடம் வன்னி மரத்தடி மூலை. நீங்கள் வன்னி மரத்தடி எங்கே யிருக்கிறது என்று விசா ரித்தால் அந்த இடத் தைப் பார்த்தால் திருச்சி யிலே திராவிட முன் னேற்றக் கழகத்தினு டைய வளர்ச்சி எங்கி ருந்து ஆரம்பமாகி எந்த அளவிற்கு இன்றைக்கு விரிந்து பரந்த கடலாக மாறியிருக்கிறது என் பதை உணரமுடியும்.

அந்த வன்னி மரத்தடிக் குப் பிறகு திராவிட முன் னேற்றக் கழகத்தினு டைய பிரச்சாரக் கூட் டங்கள், விளக்கக் கூட் டங்கள் எதுவானாலும் அந்தக் கூட்டங்களில் நானல்ல, பேராசிரியர் அல்ல அந்தக் காலத்தில் நெடுஞ்செழியன் அல்ல, அறிஞர் அண்ணா அல்ல யார் பேசினாலும் டவுன் ஹால் மைதானத்திலே தான் கூட்டம் நடை பெறும். டவுன்ஹால் மைதானம் என்பது இதில் நூறில் ஒரு பங்கு. அப்படிப்பட்ட அந்த வெளியில் டவுன்ஹால் மைதானத்திலே கூட்டம் நடைபெற்று, அதற்குப் பிறகு மேலும் கழகம் விரி வடைந்து வெல்லமண் டிப் பகுதியிலே கூட்டம் நடைபெற்று அதில் நான் பேசியிருக்கிறேன்.

வெல்லமண்டி பகுதி யிலே கூட்டம் பேசிய பிறகு, அதைப்போன்ற பரந்த வெளியான பல இடங்களில் - பல தெருக் களில்தான் எங்களால் பேசுவதற்கு வாய்ப்பி னைப் பெற முடிந்தது. இன்றைக்கு வன்னி மரத் தடி மூலையிலிருந்து தொடங்கி லட்சக்கணக் கான மக்கள் குழுமு கின்ற அளவுக்கு ஒரு மாநாடு நடக்கிறதோ என்று அய்யுறுகிற நிலை யில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறதென்றால், இது நம்முடைய வளர்ச் சிக்கு - எதிர்கால வெற்றி களுக்கு இது அடையா ளம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கி றேன்.

ஏதோ கூட்டங்களில் பேசிவிட்டு, எதிர்க்கட்சி யாக இருந்தால் ஆளும் கட்சியைத் தாக்கிப் பேசி விட்டு, ஆளும் கட்சியாக இருந்தால் எதிர்க்கட்சி யினுடைய குற்றச்சாற் றுக்கு கேலியாக, கிண்ட லுமாக பேசிவிட்டு நிறுத் திக் கொள்கிற விவகார மல்ல இந்த விவகாரம். திராவிட முன்னேற்றக் கழகம் 1949 ஆம் ஆண்டு தந்தை பெரியாரிடமி ருந்து பிரிய நேரிட்டு உருவானபோது- எங்கள் அண்ணன் அதை உரு வாக்கியபோது அதனு டைய லட்சியங்கள், கொள்கை கோட்பாடு கள், சமுதாயத்திலே புரட் சிகரமான மாறுதல் களை ஏற்படுத்தக் கூடி யவைகளாக வகுக்கப் பட்டன, வரையறுக்கப் பட்டன.

இன்றைக்கும் நாங்கள் அதை மறந்து விடவில்லை. நாங்கள் அமைச்சர்களாக ஆனா லும், முதலமைச்சர் கிரீ டமே தலையிலே சூட் டப்பட்டாலும் எங்களு டைய கொள்கைகளை எல்லாம் மறந்து விட்டு அவைகளுக்காக ஆசைப் படுபவர்கள் அல்ல நாங் கள். ``டெல்லிக்கு பாதுஷா ஆனாலும் தல்லிக்கு மகன் தான் என்று ஒரு தெலுங்கு பழமொழி உண்டு. அதைப் போல இந்தக் கொள்கை களுக்குச் சொந்தக்காரர் களாக நாங்கள் அன்றைக்கு அறிவித்த அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் கொள்கையிலிருந்து சிறிதும் பிறழ்பவர்கள் அல்லர்.

அரசியல் கட்சியாக வளர்ந்து - சமுதாயப் புரட்சி இயக்கமாக சமுதாயத்திலே பல சாதனைகளைச் செய்து பெரியார் போராடிய - தொடர்ந்து வலியுறுத்திய திருமணச் சட்டத்தை செயல்படுத்தி நம்முடைய மொழி தமிழ் மொழிதான். அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. அந்த மொழியை வீழ்த்த எது வந்தாலும் யார் வந்தாலும் அவர்களை வீழ்த்து வோமே தவிர, நாம் வீழ்ந்து விடமாட்டோம் என்ற மனவுறுதியோடு மொழிப் போராட்டங்களில் ஈடுபட்டு, இதே திருச்சி நகரத்திலேதான் கீழப்பழுர் சின்னச்சாமியை தணலுக்கு இரையாகத் தந்தோம்.

இப்படிப்பட்ட அரும் பெரும் அறப்போராட் டங்களிலெல்லாம் நம்மையே அர்ப்பணித்தது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசியல் கோட்பாடுகளுக்காக அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிநாதமாக இருக்கின்ற திராவிட இன உணர்வை யாரும் வீழ்த்தி விடாமல் பாதுகாக்கின்ற அந்தப் பணியில் இறங்கிய நாம் தேர்தலோ, கூட்டணியோ, வெற்றி தோல்வியோ இவைகளில் எதுவும் பாதிக்காமல் நம்முடைய நேரான பாதையில் சென்று கொண்டிருக்கின்றோம்.

நம்மை வழியில் பார்த்து சில பேர் பழிக்கலாம், தூற்றலாம். நாம் அப்படி தூற்றுகின்றவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதில் சொல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. அதற்கு நம்மி டத்திலே ராஜா இருக்கிறார், பொன்முடி இருக்கிறார் என்றெல்லாம் சமாதானம் அடையவில்லை. அது தேவையில்லை.

அவர்கள் பேசும்போது நான் குறுக்கிட்டால் வேகம் குறையுமே என்ற அச்சத்தால், நீங்கள் ஒரு நல்ல பேச்சை கேட்டுக் கொண் டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும்போது, நான் அதை கெடுத்து விடக் கூடாது என்று அமைதியாக இருந்து, அவர்கள் பேசி முடித்த பிறகு அருகில் அழைத்து, காதோடு சொன்னேன் இதுவே உங்களுடைய கடைசி கண்டனக் குரலாக இருக்கட்டும். இனி இம்மாதிரி பேசக் கூடாது என்று சொன்னேன்.

அதை அவர்கள் அண்ணனின் ஆணையாக எடுத்துக் கொண்டாலும் சரி, தலைவரின் கட்டளையாக எடுத்துக் கொண்டாலும் சரி, முதலமைச்சருடைய பரிந்துரையாக எடுத்துக் கொண்டாலும் சரி, இனி இதுபோன்ற தாக்குதல்கள் கூடாது. ஏனென்றால் விழிப்போடு இருக்கிறார்கள். யார் தெரியுமா? பத்திரிகைக் காரர்கள். எங்காவது ஒரு துன்பச் செய்தி கிடைத்தால், நம்முடைய தொழில் நடக்குமே என்று கருதுகின்ற சிலரைப் போல, சில பத்திரிகைக்காரர்கள் இருக்கிறார்கள். எதுவும் நடக்காவிட்டாலும் நடந்ததைப் போல பாவித்து எழுதுகின்றவர்கள், பேசுகின்றவர்கள் இருக்கி றார்கள்.

அவர்களுக்கெல்லாம் இடம் கொடுத்து விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். காலையில் இருந்து இதுவரையில் இந்த அரசின் சாதனைகளை இங்கே உரையாற்றிய நம்முடைய தம்பிமார்கள் எல்லாம் எடுத்துச் சொல்லியிருக் கின்றார்கள். தம்பி ஸ்டாலின் அவர்களுடைய பேச்சில் எத்தகைய திட்டங்கள் வரையறுக்கப்பட்டு மக்களுக்குப் போய் சேர்ந்திருக் கின்றன என்பதைச் சொன்னார்.

மிகப்பெரிய திட்டம் இந்தியாவில் இருக்கின்ற மற்ற மாநில முதலமைச்சர்கள் எல்லாம் மூக்கிலே விரல் வைத்து ஆச்சரியப்படுகின்ற திட்டம். நான் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை, அவர்களும் சேர்ந்து எதிர்காலத்திலே பாராட்ட வேண்டிய ஒரு திட்டம். பாராட்டக்கூடிய திட்டம் - அதுதான் கலைஞர் வீடு வழங்கும் திட்டம்.

இந்த ஆண்டு அதாவது 2010-க்குள் கட்டி முடிக்கவேண்டிய வீடுகளுடைய எண்ணிக்கை மூன்று லட்சம் வீடுகள் என்று சொல்லி அதை தொடங்கிவிட்டோம், தொடங்குவதற்காக ஒரு விழாவை திருச்சியிலே நடத்தினோம் - அதைத் தொடங்கி விட்டோம் - தொடங்கி வீடுகள் கட்டப் பட்டு வருகின்றன. மிக விரைவில் எங்கெங்கு கட்டப்பட்டிருக்கின்றன என்ற புள்ளி விவரங்களை உங்களுக்கு நான் தருவேன் என்ற உறுதியையும் இங்கே நான் தெரிவிக்கின்றேன்.

இந்த நம்பிக்கையைப் பற்றி கவலைப்படாமல் தம்பி ஸ்டாலின் குறிப்பிட்டதைப்போல கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் என்னு டைய அருமை நண்பர் நல்லக்கண்ணு அவர்கள் ஒரு பெரியக் கட்டுரையை இது நடக்குமா? நடக்கக்கூடிய காரியமா? இந்தத் தொகை போதுமா? என்றெல் லாம் கேட்டு மக்களை அச்சுறுத்துகின்ற ஒரு கட்டுரையை எழுதி அதை வெளியிடுவதற்கு தயாராக உள்ள ஒரு ஏடு நடுப்பக்கத்தில் வெளியிட் டிருப்பதையும் அவர் இங்கே சொன்னார்.

இதற் கெல்லாம் என்ன காரணம்? நல்ல காரியங்களை செய்ய ஆரம்பித் தால் அதை எப்படி தடுக்கலாம், என்பதற்கு சில பேர்வழிகள் சில கட்சிகள் தயாராக இருக்கின்றன. சேது சமுத்திரத்திட்டம் எவ்வளவு பெரிய பிரமாண்டமான திட்டம், யார் அறிவித்த திட்டம், யார் கையிலெடுத்த திட்டம், அறிஞர் அண்ணா கையில் எடுத்த திட்டம்.

ஆட்சிக்கு வந்தப் பிறகு, ஆட்சிக் கட்டில்தான் இருக்கிறதே, நாம் ஆயாசமாக படுத்துத் தூங்கலாம் என்று எண்ணா மல் எழுச்சி நாள் கொண்டாடலாம் வாடா தம்பி என்று நம்மையெல்லாம் அழைத்து சேலம் இரும்பாலை, சேது சமுத்திரத் திட்டம் இவை எல்லாம் நிறைவேற எழுச்சி நாள் கொண்டா டினாரே அண்ணா. அந்த அண்ணா கொண்டாடிய எழுச்சி நாளுக்குரிய திட்டம் சேது சமுத்திரத் திட்டம். அந்த திட்டத்திற்காக மதுரை மாநகரத் திலே சோனியா காந்தி அவர்களுடைய தலைமையில் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும், நானும், பல்வேறு கட்சித் தலைவர்களும், கலந்து கொண்டு வாழ்த்தி அந்த திட்டத்தை வரவேற்று அனைவரும் ஒத்துழைப் போம் வாரீர் என்று கைகோத்து நின்ற காட்சி இன்றும் என் கண்களை விட்டு மறையவில்லை.

ஆனால், அந்தத் திட்டத்தை ராமர் மீது பழியைப் போட்டு, இது ராமர் கட்டிய பாலம், ஆகவே இதை நீ கட்டக்கூடாது என்று மத்திய சர்க்காருக்கும் தடை விதித்து, மத்திய அரசி னுடைய அமைச்சர் மாண்பு மிகு தம்பி டி.ஆர். பாலு எடுத்த முயற்சிகளுக் கெல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டு அந்த திட்டத்தையும் கிடப்பிலே போட்டிருக்கின்றார்கள்.

உச்சநீதிமன் றத்திலே ஊசலாடிக் கொண்டு இருக்கிறது அந்த திட்டம். அந்த திட்டம் தமிழகத் திலே நிறைவேற்றப்பட்டிருக்குமேயானால் நான் உங்களுக்கு நினைவுபடுத்திச் சொல்லுகின்றேன் இதே திருச்சியிலேதான், அண்ணா தலைமையில் நடை பெற்ற மாநில மாநாட்டில் கழகத்திலே உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பிலே பேசும் போது, நீ என்ன தலைப்பிலே பேசப்போகிறாய்? என்று என்னைக் கேட்டு, தலைப்பை நீங்களே கொடுங்கள் என்று நான் சொன்னபோது திராவிடத் தின் உலகத் தொடர்பு என்ற இந்தத் தலைப்பிலே பேசு என்று அண்ணா அவர்கள் எனக்கு ஆணையிட்டு, அந்த தலைப்பிலே பேசியபோது திராவிடத்தினுடைய உலகத் தொடர்புகளுக்கு மேலும் வலுவூட்ட வேண்டுமேயானால் நம்முடைய துறைமுகங்கள் ஒன்றோடு ஒன்று தொடர் புடையதாக ஆக வேண்டும்.

நம்முடைய கப்பல்கள் செல்லுகின்ற கடல் வழிகள் மேலும் மேலும் வளர வேண்டும், சீரமைக்கப்பட வேண்டும். அப்படிப் பட்ட உலகத் தொடர்பை உருவாக்கினால் சேது சமுத்திரம் போன்ற திட்டங்கள் நிறைவேறினால் நம்முடைய வளம் மேலும் அதிகமாகும். நம்முடைய மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்ய வணிகம் பெருக அதைப் போல அங்குள் ளோர் இங்கே வர ஒரு காலத்திலே கடற்கரை ஓரங்களில் கொற்கை முத்துக்கள் இரைந்து கிடந்தன என்றெல்லாம் வரலாறு பேசுகிறதே, அந்த வரலாற்றை மீட்டெடுக்க திராவிடத்தின் உலகத் தொடர்புகளில் சேது சமுத்திரம் போன்ற சீர்மிகுந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அன்றைக்கே நான் பேசினேன்.

இது அண்ணா வழியிலே நான் பேசிய பேச்சு. அண்ணா கற்றுத் தந்தப் பேச்சு, அண்ணா தந்த தலைப்பில் நான் பேசிய பேச்சு, அந்தப் பேச்சை பேசும்போது இந்தக் கூட்டத் திலே பெயரைச் சொல்லுவதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள், தம்பி வைகோ கூட அதை பா ராட்டி, அதை நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்று பேசினார். இன்றைக்கு அவர் எங்கே என்றால் அங்கே உள்ளோரோடு கூடிக்கொண்டு அந்த திட்டமே தேவையில்லை என்று சொல்லுகின்ற நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்.

வேறு சில பேர் கூட பேசுகின்றார்கள், இந்த திட்டம் கருணாநிதியால் கெட்டது என்று பேசுகி றார்கள். சேலம் உருக்காலைத்திட்டம் யாரால் வந்தது, சேலத்திலே உருக்காலை வேண்டும் என்று அந்த திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று வலியுறுத்தி, அப்பொழுது மத்தியிலே நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அய்ந்தாண்டு திட்ட வரைவைப் புறக்கணித்து விட்டு வெளி நடப்புச் செய்தவன் இந்த கருணாநிதி.

அந்த வெளிநடப்பு செய்தபிறகு என்னோடு விமானத்திலே வந்த அந்நாள் நிதியமைச்சர் சி.சுப்பிரமணியன் அவர்கள் என்ன இப்படி செய்து விட்டீர்கள், பிரதமர் கூட்டிய கூட்டத்தில் வெளிநடப்பு செய்யலாமா? என்று கேட்டபோது நான் சொன்னேன் அது பிரதமர் கூட்டியிருக்கலாம், அல்லது குடியரசுத் தலைவர் கூட்டியிருக்கலாம், என்னுடைய மாநிலத்தி னுடைய திட்டம் ஏற்கப்பட வில்லை, பிறகு எனக்கு என்ன வேலை என்று சொன்னேன். அப்படிப்பட்ட மகத்தான சரித்திர புகழ் வாய்ந்த அந்த திட்டம் இன்னும் கிடப்பிலே கிடக்கிறது, இன்னமும் தூசுத் தட்டி அதை எடுத்து நிறைவேற்றுவதற்கு யாரும் முன் வரவில்லை.

நீதிமன்றத்தை சாக்காக காட்டப்படுகின்றது, சாக்காகக் காட்டப்படுகிறது என்று சொல்லும் போது நான் உரிமையோடு மத்தியிலே இருக்கின்ற அரசையும் குறைகூற விரும்பவில்லை. மத்திய அரசு இதை எப்படியாவது நிறைவேற்றக்கூடிய நிறை வேற்றுவதற்கு ஏற்ப திட்டம் இது என்பதை உணர்ந்திருக்கின்ற காரணத்தால் இனியும் தாமதம் செய்யாமல் அந்த திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று நான் இப்போது கேட்டுக் கொள்கிறேன்.

இதை நான் இப்பொழுது ஞாபகம் படுத்துவதற்கு என்ன காரணம் என்றால், இந்த விழா எழுச்சி விழாவாக இருக்குமென்று தம்பி நேரு காலையிலிருந்து எல்லா நிகழ்ச்சிகளிலும் - மாலையில் எழுச்சி நாள் கொண்டாடுகிறோம் என்று சொன்னார். எனவே தான் நான் சொல் கிறேன் - இந்த எழுச்சி விழாவுக்கு அடையாள மாக ஒரு சபதம் எடுத்துக் கொள்வோம்.

இன்றி லிருந்து சேது சமுத்திரத் திட்டத்திற்காக நீதி மன்றத்தை எதிர்த்து அல்ல - நீதி மன்றத்தினு டைய செயலை விரைவு படுத்த - சட்ட ரீதியாக என்னென்ன முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டுமோ அவைகளையெல்லாம் மேற் கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டுவந்தால் நம்முடைய கடலில் வெளி நாடு களுக்குச் செல்கின்ற கப்பல்கள் மிதக்கும், நம் முடைய கடலில் வெளிநாடுகளிலிருந்து வரு கின்ற கப்பல்கள் நீச்சல் போடும்.

அப்படிப்பட்ட உன்ன தமான பொருளாதார ஏற்றம் உருவாகும். அந்த ஏற்றத்தைக் கெடுக்க நினைக்கிறார்களே, அதை தயவுசெய்து மத்திய அரசு உணர்ந்து பார்த்து, அந்தத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டு மென்று இந்த நேரத்திலே நான் இந்த விழாவின் மூலமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

எதிர் மேடைகளிலே பல கருத்துகள், இப்போது நடைபெறுகின்ற ஆட்சியாளர் களைப் பற்றி யெல்லாம் எடுத்துச் சொல்லப் பட்டு - இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றெல்லாம் சாபமிடப்பட்டு - ஆங்காரமாக பேசப்படுகின்ற காட்சிகளையெல்லாம் நான் காண்கிறேன். இதே நகரத்தில் என்னைப் பற்றி எவ்வளவு இழிவாகப் பேசினார் என்றெல்லாம் என்னுடைய நண்பர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

பேசி விட்டுப் போகட்டும் - உங்களுக்கு அதிலே ஆசையா, அவர்கள் தான் பேசினார்கள், அதை இங்கேத் திரும்பச் சொல்லி, அதனை என் காதிலே போட வேண்டுமா? அதிலே உங்களுக்குத் திருப்தியா? அவர்கள் திருப்திக்குப் பேசுகிறார்கள். அவர்களின் ஆசைக்கு பேசுகிறார்கள். நான் சொன்ன நபிகள் நாயகத்தின் நிகழ்ச்சி தான் உங்களுக்கு ஞாபகத் திற்கு வர வேண்டுமே அல்லாமல், அவர்கள் பேசியது எல்லாம் ஞாபகத்திற்கு வந்து திரும்பத் திரும்பப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

புண்ணிலே பல வகை உண்டு. குரங்குப் புண்ணு ஒன்று உண்டு. குரங்குப் புண் இருக்கிறதே, ஒரு சின்ன சிகப்பு புள்ளி மாதிரி ஆரம்பித்து, அதைப் போட்டு சொரிந்து, சொரிந்து அது பெரிதாகி, சாகிற வரை அந்தப் புண் ஆறாது. ஒன்ணு சாகணும், அல்லது அந்தப் புண் ஆறணும். அதற்குப் பேரு தான் குரங்குப் புண் - அந்தப் புண் உள்ளவர்களுக்கு ஒரு நமைச்சல் வரும்.

அந்த நமைச்சலை நாம் ஏற்படுத்திக் கொள்ளாமல், நம் வழி அண்ணா வழி - வசவாளர்கள் வாழ்க என்று சொன்னவர் அல்லவா நம் அண்ணா! வாழ்க வசவாளர்கள் - இது அண்ணாவின் பொன்மொழி அல்லவா? எனவே நம்மை யார் திட்டினாலும், வசை பாடினாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நம் வழியில் நாம் செல்வோம்.

கம்யூனிஸ்ட்கள் - குறிப்பாக தோழர் நல்ல கண்ணு போன்றவர்கள் இந்த அளவிற்கு ஏன் நம் மீது சீறி விழுகிறார்கள் என்றால், ஒரு காலத்திலே புரட்சிகரமான இயக்கமாக - ஏழையெளிய மக்களின் பக்கத் துணைவனாக எங்களைப் போன்றவர்களுக் கெல்லாம் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் - இன்றைக்கு எங்கே இருக்கிறார் கள்? சிறுதாவூர்! அங்கே அபகரிக்கப்பட்ட நிலங்கள் ஏழை பஞ்சமார் களின் நிலங்கள் என்று என்னிடத் திலேயே கொண்டு வந்து மனு கொடுத்தார்கள்.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்டு விசாரிக்கச் சொன்னேன், நடவடிக்கை எடுக்கச் சொன்னேன், குழு ஒன்றையே அமைத் தேன். அவர்களின் அறிக்கை வருவதற்குள்ளாக வே இவர்கள் அங்கேயே போய் விட்டார்கள். சிறுதாவூருக்கே போய் விட்டார்கள்! என் மீது கோபித்துக் கொள்வதற்கு இதிலே என்ன இருக் கிறது? அகில இந்திய அளவிலே கூடப் பார்த் தால், காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக் கும் இடையே - இந்த இடைவெளி எப்படி ஏற்பட்டது? என்னைப் பொறுத்தவரையில் சிறு வயதிலே இருந்து சில காலம் என்னைச் சுற்றி கம்யூ னிஸ்ட்கள் தான். நல்ல காலம் நான் பெரியா ரையோ, அண்ணாவையோ சந்திக்காமல் இருந்தி ருந்தால், இப்போது நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகத் தான் இருந்திருப்பேன். நல்ல காலம் அவர்களைச் சந்தித்து விட்டேன். ஏனென்றால் அந்தக் கொள் கையிலே அடிப்படை கொள்கையிலே எனக்கு பற்று உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment