கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, September 1, 2010

நாகர்கோவிலில் செப்.20ல் திமுக முப்பெரும்விழா - விருதுகள் அறிவிப்பு



இதுகுறித்து, தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 2010ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பெரியார் விருது அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்துக்கும், அண்ணா விருது தொ.மு.ச. பேரவை தலைவர் செ.குப்புசாமிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது ராஜம்ஜானுக்கும், கலைஞர் விருது ஜி.எம்.ஷானுக்கும் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பரிசு:ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி நடத்தப்படுகிறது.
2010ம் ஆண்டுக்கான போட்டிகளின் முதல் நிலைப் போட்டிகள், அனைத்து மாவட்டங்களிலும் நடந்து முடிந்துள்ளன. பள்ளி மாணவர்களுக்கு இறுதி போட்டிகள், செப்.2ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும். சாவல்பூண்டி சுந்தரேசன், சீர்காழி வை.ஞானசேகரன், நீலகிரி கே.கே.ஜெயகுமாரி நடுவர்களாக இருப்பார்கள். கல்லூரிகளுக்கு 3ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும். கவிதைப்பித்தன், மு.செல்லா, வீரமர்த்தினி நடுவர்களாக இருப்பார்கள். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் போட்டிகள் நடைபெறும். தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் தஞ்சை கூத்தரசன் தலைமை தாங்குவார்.
இறுதி போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ,மாணவிகளுக்கு 2ம் தேதி மாலை 4.30 மணிக்கு முரசொலி அறக்கட்டளை தலைமை நிர்வாகி உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்குகிறார். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 3ம் தேதி மாலை 4.30 மணிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பரிசு வழங்குகிறார்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக முதல் பரிசு க்ஷீ 15000, 2ம் பரிசு க்ஷீ 10000, 3ம் பரிசு க்ஷீ 5000 ஆறுதல் பரிசு 2 பேருக்கு தலா க்ஷீ 3000 வழங்கப்படும். செப்டம்பர் 20ம் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பரிசுகள், சான்றிதழ்களை முதல்வர் கருணாநிதி வழங்குவார்.
இத்தகவலை முரசொலி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment