
நாகர்கோவிலில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றார் வேளாண் மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். ஏற்புரையில் அவர் பேசியதாவது: முப்பெரும் விழாவில் பெரியார் விருதை எனக்கு வழங்கிப் பெருமை சேர்த்த தலைவர் கலைஞருக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்துத் தடுமாறுகிறேன். கிரேக்க நாட்டு தத்துவ மேதை சாக்ரடீஸ் போல, பிரான்ஸ் தத்துவ ஞானி வால்டேர் போல, மனித உரிமைக்காகப் போராடும் இயக்கம் தி.மு.க. தமிழர்கள் தன்மானம் மிக்கவர்களாகவும், சுயமரியாதை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி 1926 ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை இயக்கத் தைத் தொடங்கினார். வைக்கம் போராட்டத்தில் தீண்டாமையை எதிர்த்துப் போராடினார். 1934 ஆம் ஆண்டு தனது சுயமரியாதை இயக்கத்தில் அண்ணாவை சேர்க்க விரும்பினார். அண்ணாவும் அதில் சேர்ந்தார். 1938 இல் பள்ளி மாண வராக இருந்த கலைஞர், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்தார். அன்று முதல் இன்றுவரை அண்ணாவின் தம்பியாக இருந்து நம்மை வழி நடத்தி வருகிறார். 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிடர் கழகத்தில் இருந்து தி.மு.க. பிரிந்தபோதும், இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கிபோல செயல்பட்டன. ஆனால், இன்று தம்மை வளர்த்து விட்ட தலைவர்கள் மீதே சாடு வதை நாம் பார்க்கிறோம். நான் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவன் அல்லன். பெரி யாரின் பேரப்பிள்ளை. அண்ணா வின் தம்பி என்பதைவிட படித்து பட்டம் பெறுவது பெரிதாக தெரியவில்லை. பெரியார் விருதை விட வேறு ஒரு பட்டம் எனக்குத் தேவையில்லை. என் வாழ்வின் சிறந்த பட்டமாக இதைத்தான் கருதுகிறேன். தி.மு.க.வில் இருப்பவர்கள் தியாகம் புரிந்தவர்கள். நாங்கள் பதவிக்காகவோ, பொழுது போக் குக்காகவோ அரசியலுக்கு வர வில்லை. கட்சியில் உள்ள ஒவ் வொருவரையும் சுயமரியாதைக் காரன் ஆக்குவதே லட்சியம். 1961 இல் கழகத்தை அழிக்க சதி நடந்தது. தலைகாட்டிய துரோகம் வீழ்த்தப்பட்டது. 1971 இலும் துரோகம் வீழ்ந்து தலைவர் கலை ஞர் அசைக்க முடியாத சக்தி ஆனார். 1993 இலும் துரோகம் வீழ்த்தப்பட்டது. உதயசூரியன் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் தனர். அப்போது சேலம் வந்திருந்த கலைஞர் என்னிடம் என்ன கூறினார் தெரியுமா? உதயசூரியன் சின்னம் மட்டும் நமக்கு வரா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றார். அப்படிப்பட்ட தலைவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். தி.மு.க.வுக்கு எதிரான சதி ஒரு போதும் நிறைவேறாது. - இவ்வாறு வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசினார். |
No comments:
Post a Comment