கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 3, 2010

காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்வு : சோனியா காந்திக்கு கருணாநிதி வாழ்த்து


அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்திக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்திக்கு, முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4வது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங் களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தலில் 4வது முறையாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளீர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னின்றதும், முன்னெப்போதுமில்லாத, இணையற்ற தியாகம் செய்ததும் நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
உங்கள் தலைமையில் நடைபெறும் கட்சியின் செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சி மேலும்மேலும் வளர்ந்து வருவதுடன், கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் வளர்ந்து வருகிறது.
ஏழை மக்களுக்காக சேவை செய்யும் வகையிலும், நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும் கருவியாகவும், காங்கிரஸ் கட்சியை உருவாக்கியுள்ளீர்கள்.
இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில் தமிழக மக்களின் சார்பில் எனது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment