கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 4, 2010

தி.மு.க.வின் ஆட்சி காலம்தான் அரசு ஊழியர்களின் பொற்காலம் - முதல்வர் கருணாநிதி


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் ஆத்திரமூட்டக் கூடிய விஷயங்களை கூட, அமைதியான வார்த்தைகளை கோர்த்தெடுத்து, வாதாட கூடிய இயல்புடையவர். அவர், தோல்வி பயத்தில் கம்யூனிஸ்ட்களை முதல்வர் சாடியிருக்கிறார் என்று சொல்லியிருப்பதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது.
எத்தனையோ தோல்விகளை என்னுடைய அரசியல் வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அதற்காக வாடியதும் இல்லை. யாரையும் பரதன் சொல்வது போல சாடியதும் இல்லை.
திமுக அரசுக்கும், ஓரிரு சத்துணவு பணியாளர் சங்கங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையில், ஆர்ப்பாட்டம், கோட்டை முற்றுகை, மாநிலம் முழுவதிலுமிருந்து படையெடுப்பு என்று பேரணியாக புறப்பட்டு வருவார்களேயானால், சட்டப்படி அவர்களை தடுக்க, மீறியவர்களை கைது செய்ய ஒரு அரசுக்கு கடமையும், உரிமையும் உண்டு. திமுக அரசை பொறுத்தவரையில், சத்துணவு ஊழியர்கள் ஆனாலும், வேறு எந்த ஊழியர்கள் ஆனாலும் அவர்களது கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியது இல்லை.
தி.மு.க ஆட்சிக் காலம்தான், அரசு அலுவலர்களின் பொற்காலம் என்ற சொற்றொடர் நிலைத்து விட்ட ஒன்று. ஆனால், இந்தப் பிரச்னை எப்படி ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே டெல்லியிலிருந்து வந்த தோழர் ஏ.பி.பரதனுக்கு, இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் சொன்னதுதான் உண்மையாக தோன்றி, உஷ்ணமான வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். இவர்கள் வைத்த கொள்ளி இந்தியாவில் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதலாக பரவுகிறது என்பதை நான் வேதனையோடு சுட்டிக்காட்டியிருப்பதைகூட பரதன் விமர்சித்திருக்கிறார். மாவோயிஸ்ட்களுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியதுடன், நான் வீண் பழி சுமத்தி விட்டதைபோல வெகுண்டெழுந்து வியாக்யானம் செய்திருக்கிறார்.
ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். நக்சலைட்டு அமைப்பு என்பது 1967 தேர்தலுக்கு பின்னர், மேற்கு வங்கத்தில்தான் ஆரம்பமானது. அன்று அவர்கள் நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் இயக்கம் வேறு சில மாநிலங்களுக்கும் பரவியபோது, நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள். பரதன் கோவையில் அளித்த பேட்டியில், அடிக்கடி கருணாநிதி கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களை சுட்டிக்காட்டுகிறார். ஒரு சில விஷயங்களில் அது சரிதான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் கூறுவதைப் போல, மாவோயிஸ்ட்களுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் இடையே ஏதோவொரு உறவு இல்லை என்றால், மத்திய அரசு மாவோயிஸ்டுகளுக்கு தடை விதித்து, தீவிரவாதிகள் என அறிவித்த போது கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?
மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத், இந்த பிரச்னையை அரசியல் ரீதியாகத்தான் தீர்க்க வேண்டுமே தவிர, தடையால் ஒரு பயனும் ஏற்படாது என்று தெரிவிக்கவில்லையா? இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. குருதாஸ் குப்தா, மாவோயிஸ்ட்களை தடை செய்ததற்கு பதிலாக, அரசியல் ரீதியாக அவர்களை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று சொன்னாரா இல்லையா?
மாவோயிஸ்ட்களுடன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாசம் இல்லையென்றால், 3&4&2008 தேதிய ‘தீக்கதிர்‘ நாளேட்டில் நேபாள அரசின் வெளியுறவு துறை அமைச்சரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழு உறுப்பினருமான சகானா பிரதான் அளித்த பேட்டி எவ்வாறு வெளியிடப்பட்டது? அந்தப் பேட்டியில் மாவோயிஸ்டுகள் தேசிய நீரோட்டத்திலும், பொதுவான மக்கள் இயக்கங்களிலும் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியிருந்தாரா இல்லையா?
அது மாத்திரமா? 14&4&2008 அன்று ‘ஜனசக்தி’ தலையங்கத்தில், ‘மன்னர் ஆட்சி முற்றுப்பெற்று, புத்தம் புதியதாய் பிறந்த ஜனநாயகத்தின் மழலை சத்தம் நேபாளத்திலிருந்து நம் காதுகளில் இனிமையாக கேட்க தொடங்கியுள்ளது. பெருவாரியான வாக்குகளை பெற்று, மாவோயிஸ்ட்கள் வெற்றி பெறவிருக்கிறார்கள். இனி நேபாளத்திற்கு புதிய வாழ்க்கை கிடைக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். 1397969521 என்று எழுதப்பட்டது மறந்து விடக்கூடிய ஒன்றல்லவே.
30&4&2008 தேதிய ஜனசக்தியில், ‘சி.மகேந்திரன் எழுதிய கட்டுரையில், மிகவும் பிற்போக்கு அராஜகத்தை கொண்ட மன்னராட்சி பாதையிலேயே நேபாளம் எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தது. உலகின் எந்த ஒரு நாட்டின் மாற்றங்களும், கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களால்தான், சாதிக்க முடியும் என்பது உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மை. வீரம் செறிந்த மாவோயிஸ்ட் புரட்சியாளர்களுக்கும், மன்னருக்கும் இடையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மன்னராட்சிக்கு ஆயுதம் வழங்கினார்கள் என்ற உண்மையை யாரும் மறந்துவிட இயலாது’ என்று எழுதியது மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகத்தானே?
அவ்வளவு ஏன், கோவையில் பேட்டியளித்துள்ள ஏ.பி.பரதனே, Òநேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி, தெற்காசியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும்Ó என்று கூறவில்லையா? மாவோயிஸ்ட்கள்பால் கம்யூனிஸ்ட்களுக்கு அன்பு இல்லை என்றால், பாசம் இல்லை என்றால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் அவர்களின் இதழ்களில் ஏன் வெளியிடப்பட்டன? இதைத்தானே நான், அவர்கள் வைத்த கொள்ளிதான் இந்தியாவில் சில மாநிலங்களில் Òமாவோயிஸ்ட்Ó தாக்குதல்கள் என்று எழுதியிருந்தேன்.
இந்த ஆண்டு மே மாத இறுதியில் செய்தியாளர்கள் என்னைச் சந்தித்த போது, Òநக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்கள் சமீப காலமாக பொது மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள், அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?Ó என்று கேட்ட நேரத்தில் நான் அளித்த பதில், Òஅவர்களது லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம். அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம். ஆனால், அவற்றை நிறைவேற்றுவதில் இப்போது அவர்கள் கையாளுகிற முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவை. இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக நான் சொல்லி வருகிற ஒரு கருத்து இது.
அந்தக் கருத்துக்கு மாவோ தலைவர்கள் மதிப்பளித்து, மனித நேயத்தை காப்பாற்றுவதற்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்Ó என்பதாகும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment