கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 17, 2010

வெள்ளைப் புலிக் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய கலைஞர்


வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்த வெள்ளைப் புலிக் குட்டிகளுக்கு செம்பியன், இந்திரா, வள்ளி எனும் பெயர்களை முதல்வர் கருணாநிதி சூட்டினார்.


இந்தியாவில் மிகவும் அரிதான வெள்ளைப் புலிகள் தற்போது ஏறத்தாழ 100 மட்டுமே உள்ளன. அவை பல்வேறு மாநிலங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2006 வரை இந்த அரிய வகை வெள்ளைப் புலி இனம் இல்லாமல் இருந்தது.


இந்நிலையில் இரண்டு சிங்கவால் குரங்குகளை சென்னை, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து புதுடெல்லியிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு வழங்கி, ஓர் ஆண் வெள்ளைப் புலியும், ஒரு பெண் வெள்ளைப் புலியும் அங்கிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பெறப்பட்டன.


அந்த வெள்ளைப் புலிகள் மூலம் கடந்த ஜூன் மாதத்தில் ஓர் ஆண் வெள்ளைப் புலிக் குட்டியும், இரண்டு பெண் வெள்ளைப் புலிக் குட்டிகளும் பிறந்துள்ளன. அந்த வெள்ளைப் புலிக் குட்டிகளில் ஆண் புலிக் குட்டிக்கு சோழப் பேரரசின் சின்னமாகப் புலி விளங்கியதால், சோழப் பேரரசின் நினைவாக செம்பியன் என்ற பெயரும், ஒரு பெண் வெள்ளைப் புலிக் குட்டிக்கு இந்திய நாட்டின் புகழ்மிக்க பிரதமராக விளங்கிய அன்னை இந்திரா காந்தி நினைவாக இந்திரா என்றும், மற்றொரு பெண் வெள்ளைப் புலிக் குட்டிக்கு அண்ணல் காந்தியடிகளுடன் தென்னாப்பிரிக்க சுதந்திரப் போரில் தீரம் காட்டிய வீரப் பெண்மணி தில்லையாடி வள்ளியம்மை நினைவாக வள்ளி என்றும் முதல்வர் கருணாநிதி பெயர்களைச் சூட்டினார்.

No comments:

Post a Comment