கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, September 6, 2010

வைரமுத்து மகன் திருமணம் முதல்வர் நடத்தி வைத்தார்


சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கவிஞர் வைரமுத்து, பொன்மணி ஆகியோரின் மகன் கபிலன் மற்றும் நீதிபதி மாயாண்டி, அமுதா ஆகியோரின் மகள் ரம்யா திருமணத்தை முதல்வர் கருணாநிதி நேற்று நடத்தி வைத்தார்.
மணமக்களை வாழ்த்தி முதல்வர் பேசியதாவது:
வைரமுத்துவின் காதல் கவிதை பாடல்களில் வேண்டுமானால் மென்மை இருக்கலாம். ஆனால், கவிதை நடையில் அவற்றை அவர் உச்சரிக்கும்போது அந்த மென்மையை நாம் காண முடியாது. மணமக்கள் இப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று வைரமுத்து அதிகாரக் குரலிலே இங்கே ஆணையிட்டதை கேட்டோம்.
இந்த மேடையிலே இவ்வளவு பேரை வைத்துக் கொண்டு சொன்ன அறிவுரையினை வீட்டிலேயே 2 பேருக்கும் வைரமுத்து சொல்லியிருக்கலாம். பல்லாயிரக்கணக்கிலே உள்ள உங்கள் முன்னால் சொன்னதற்கு காரணம், இதுபோன்ற அறிவுரையை அவரவர் வீடுகளிலே உள்ள மாப்பிள்ளைகளும், மருமகள்களும் பெற வேண்டுமென்ற பரந்த நோக்கத்திலே சொன்னாரென்று எடுத்து கொள்கிறேன்.
மணமகன் கபிலனிடம் நான் காட்டுகிற அன்பு அளவிட முடியாதது. கபிலன் எழுதிய புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலே தன்னை அணுகி வந்துள்ள மணமகளுக்கு கபிலன் சொல்கின்ற அறிவுரையை, நான் அதை அறிவுரை என்றே கருதுகிறேன்.
தன் மனைவிக்கு, இல்லத்திற்கு வருகிற அரசிக்கு கபிலன் என்ன சொல்கிறார் என்பதை அந்தக் கவிதையிலே படித்து பார்த்தேன். இந்த சட்டையை நீ போட்டுக் கொள் என்று மனைவி சொல்வதும், இந்த புடவையை நீ கட்டிக் கொள் என்று கணவன் சொல்வதும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள், அதை ஒரு தியாகமாகவே கபிலன் கற்பித்து, அந்தத் தியாகங்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
இன்னொன்று சொல்கிறார். வெளியூர் புறப்படும்போது வீட்டிலே வாசல் படிக்கருகே வந்து ‘புறப்படுகிறேன்’ என்று சொன்னவுடன் பதறி வந்து வழியனுப்பாமல், சமையல் அறையில் இருந்து கொண்டே ‘சரி’ என்று சொல், பிரிவின் திமிர் குறைப்போம் என்று கூறுகிறார். இந்த கவிதை இன்றைக்கு போற்றப்படுகிறதோ இல்லையோ, எதிர்காலத்தில் எந்த அளவிற்கு புதுமை கவிதையாக போற்றப்படும் என்பதை புரிந்து கொண்டேன்.
‘அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல்தான் பிறந்திருக்கு’ என்பதற்கு இது ஒரு உதாரணம். ஏனென்றால், வைரமுத்து எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். நாம் சொன்னதையெல்லாம், கலைஞரிடம் சொல்லிடுவாரோ என்று ரஜினி பயப்பட வேண்டாம்.
எதையெதை வைத்துக் கொள்ள வேண்டுமோ, அவைகளை வைத்துக் கொண்டு, எதையெதை வெளியிடலாமோ அதைத்தான் வெளியிடுவார். ஆனால், ரஜினிக்கு சொல்லி வைக்கிறேன், உங்கள் விஷயத்தில் எதையுமே சொல்லாமல் வைத்திருக்கிறார் என்று நீங்கள் நினைத்து கொள்ள வேண்டாம். சொல்லியிருக்கிறார், இருந்தாலும் அது என்ன விஷயம் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.
வைரமுத்து, என்றென்றைக்கும் என்னுடைய தம்பியாகவே இருப்பார். நான் அவருக்கு அண்ணனாகவே விளங்குவேன். இந்த அண்ணன் & தம்பி உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. அவ்வளவு கெட்டியான உறவு, அழுத்தமான உறவு என்பதை உறுதி செய்து, இங்கே உறுதி செய்யப்பட்டது வாழ்க்கை ஒப்பந்தத்திற்கான உறுதி மாத்திரமல்ல, எங்களுடைய நட்புக்கான உறுதியும் என்பதையும் எடுத்துச் சொல்லி, மணமக்கள் நீண்ட காலம் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

No comments:

Post a Comment