கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, September 27, 2010

போலீசாரின் தேவைகளை நிறைவேற்ற தயார் - முதல்வர் கருணாநிதி




சென்னை மெரினா கடற்கரை எதிரே காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வெள்ளை மாளிகை போன்ற இந்த கட்டிடம், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு வசதிகளுடன் அங்கு புதிய கட்டிடம் கட்டவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி, ஸி24.5 கோடி செலவில் 1,61,702 சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் கூட்ட அரங்கு, பண்டக சாலை, பணியாளர் பிரிவு, ஆலோசனை கூடம், டிரைவர்கள் தங்கும் இடம், மருந்தகம், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த கட்டிடம் 2 மாடிகள் கொண்டது.
இந்த புதிய கட்டிடத்தை நேற்று திறந்து வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இப்போது, இனிய கட்டிட திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த அருமையான டிஜிபி அலுவலக கட்டிடம், ஏற்கனவே வேறு இடத்துக்கு மாற்றப்பட இருந்தது. இந்த அரசு அமைந்ததும் புராதன சின்னமாக திகழும் காவல் துறையின் தலைமை அலுவலகம், அதே இடத்தில் இயங்கும் என்று அறிவித்தோம். மேலும், கூடுதல் கட்டிடம் கட்டவும் உத்தரவிடப்பட்டது.
பாதுகாப்பு நுண்ணறிவு பிரிவுக்கும் புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உயரமான கட்டிடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் சட்டம்& ஒழுங்கு, கட்டுப்பாட்டை காப்பாற்ற ஆற்றும் பணி முக்கியமானது. நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்தும் அதிகாரிகள், இந்த அரசில் செயல்பட்டு வருகின்றனர். இது பாராட்டத்தக்க ஒன்றாகும். சட்டம்& ஒழுங்கு மற்றும் அமைதி காப்பதில் தலைமை அதிகாரி முதல் காவலர்கள் வரை திறம்பட பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் சரியாக பேச முடியவில்லை. கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான மக்களை சந்தித்த மகிழ்ச்சிக்கு இணையாக இந்த நிகழ்ச்சி உள்ளது.
திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் போலீசாருக்காக பாடுபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் காவலர்களின் தேவைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
டிஜிபி லத்திகா சரண் பேசுகையில், ‘’காவலர் குடியிருப்பு 550 சதுர அடியில் இருந்து 650 சதுர அடியாக உயர்த்தி ஆணையிட்டார், முதல்வர் கருணாநிதி. ராணுவத்தில் இருப்பதுபோல் போலீஸ்காரர்களுக்கும் கேண்டீன் அமைக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரம் காவலர்கள் ஒரே நேரத்தில் பயிற்சி பெற மத்திய காவல் பயிற்சி பள்ளி தொடங்க முதல்வர் ஆணையிட்டார். 3 போலீஸ் கமிஷன்களை அமைத்துள்ளார். இப்போது ஸி24.5 கோடியில் கூடுதல் கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கு காவலராக முதல்வர் விளங்குகிறார்’’ என்றார்.
தலைமையிடத்து ஐஜி காந்திராஜன் நன்றி தெரிவித்து பேசுகையில், ‘’உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. காவலர்களுக்கு காவலராக முதல்வர் இருக்கிறார். பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்’’ என்றார்.
விழாவில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மாலதி, உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன், சட்டம்& ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரன், கூடுதல் டிஜிபிக்கள் சேகர், டி.கே.ராஜேந்திரன், அனூப் ஜெய்ஸ்வால், புறநகர் கமிஷனர் ஜாங்கிட், உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ‘மருதம்’ வளாகத்தில் ஸி88.44 லட்சம் செலவில் 7,698 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள விஐபி செக்யூரிட்டி பிரிவுக்கான கட்டிடத்தையும், முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
அப்போது, அதிரடிப் படை போலீசாரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண் டார்.

No comments:

Post a Comment