கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 18, 2010

திமுக முப்பெரும் விழா: முதல்வர் பயண விபரம்


நாகர்கோவிலில் இம்மாதம் 20-ம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதியை இவ்விழாவிற்கு தலைமையேற்கிறார்.

இது குறித்து நாகர்கோயிலில் நேற்று (17.09.2010) திமுக அமைச்சரும் கட்சியின் மாவட்டச் செயலருமான என். சுரேஷ்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர், ‘’நாகர்கோவிலில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி இம் மாதம் 19-ம் தேதி மாலை 6.20 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடைகிறார்.

இரவில் அங்குள்ள தைக்காடு பொதுப்பணித்துறை தங்கும் விடுதியில் தங்குகிறார். அடுத்த நாள் (செப்.20) அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டத்துக்கு வருகிறார்.

மாவட்ட எல்லையான களியக்காவிளையில் காலை 9 மணிக்கு முதல்வருக்கு குமரி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம், தக்கலை, பார்வதிபுரம், சவேரியார்கோயில் சந்திப்பு, சுசீந்திரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் முதல்வர் அங்குள்ள பொதுப்பணித்துறை தங்கும் விடுதியில் மதிய உணவு அருந்துகிறார்.

பின்னர் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு கொட்டாரம், ஈத்தாமொழி சந்திப்பு, பீச்ரோடு சந்திப்பு வழியாக விழா நடைபெறும் பொருள்காட்சி திடலுக்கு வருகிறார்.

மாலை 5.30 மணிக்கு முப்பெரும் விழாவில் முதல்வர் பேசுகிறார்.விழா முடிந்தபின் அங்கிருந்து காரில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்று தைக்காடு தங்கும் விடுதியில் தங்குகிறார்.

சென்னைக்கு அடுத்தநாள் காலையில் புறப்பட்டு செல்கிறார்.

இந்த விழாவில் திமுகவைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்’’என்று தெரிவிதார்.


No comments:

Post a Comment