கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, September 6, 2010

தமிழக முதல்வர் அணி வெற்றி:மு.க.ஸ்டாலின் ஆட்டநாயகன்சென்னையில் தமிழக முதல்வர் அணி மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணி இடையே இன்று நடைபெற்ற நட்புறவு கிரிக்கெட் ஆட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக முதல்வர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தமிழக முதல்வர் அணியில் ஸ்டாலின் (கேப்டன்),பொன்முடி, ஜித்தன் ரமேஷ்,வெள்ளக்கோயில் சாமிநாதன்,நடிகர் அரவிந்த்,எஸ்.பி.பி. சரண்,ரமணா,துரைமுருகன் ஸ்ரீகாந்த், எல்.சிவராமகிருஷ்ணன், என்.வெங்கட்ராகவன்,அசோக் பொன்முடி,நடிகர் பிரசன்னா,சாக்ஷி சிவா ஆகியோர் விளையாடினர்.


தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணியில் மைக்ரேன் (கேப்டன்) ,ஏ.கே. தரீன் ,பீட்டர் வர்கீஸ் (இந்தியாவுக்கான தூதர்),பாப் போர்டு, ஆர்ச்சி, மார்க்,டெர்ரி, டேனி, பிரைன் மேயஸ், துஷார் அகர்வால், டோனி,மிக்லே,ஜெர்விஸ் ஆகியோர் விளையாடினர். டாஸ் வென்ற தெற்கு ஆஸ்திரேலிய அணி முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, அந்த அணி 10 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்தது.


அடுத்து களமிறங்கிய தமிழக முதல்வர் அணி 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.


தமிழக முதல்வர் அணியின் கேப்டன் ஸ்டாலின் பந்துவீச்சில் தெற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக் ரேன் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்டாலின், அசோக் பொன்முடி, எல். சிவராமகிருஷ்ணன், நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.


ஆட்ட நாயகன் விருது ஸ்டாலினுக்கும் அசோக் பொன்முடிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

தெற்கு ஆஸ்திரேலிய முதல்வரும் அந்த அணியின் கேப்டனுமான மைக் ரேன் வீசிய கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து தமிழக முதல்வர் அணி வெற்றி இலக்கை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.


தெற்கு ஆஸி. அணியின் பிரைன் மேயஸ் மற்றும் ஜெர்விஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.


இந்த கிரிக்கெட் போட்டியின் இடையே கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வெற்றி பெற்ற தமிழக முதல்வர் அணிக்கு ஆளுநர் பர்னாலா பரிசுக் கோப்பை வழங்கினார்.


No comments:

Post a Comment