இந்தியன் வங்கியின் 52 புதிய கிளைகளை, வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்தியன் வங்கி சார்பில் தமிழகத்தில் 5 கிளைகள், 21 ஏடிஎம் மையங்கள் மற்றும் இந்தியாவின் 11 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 21 கிளைகள், 31 ஏடிஎம் மையங்கள் தொடக்க விழா, தலைமைச் செயலகத்தில் நேற்று காலையில் நடந்தது.
முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத் தார். அப்போது நிதித் துறை செயலர் சண்மு கம், இந்தியன் வங்கி தலைவர் டி.எம்.பாசின், செயல் இயக்குனர்கள் பட்டாச்சாரியா, ராமகோபால் ஆகியோர் உடன் இருந் தனர்.
பின்னர், இந்தியன் வங்கி தலைவர் டி.எம்.பாசின் கூறியதா வது:
சுய உதவிக் குழுக்களுக்கு எங்கள் வங்கி சிறந்த முறையில் கடன் அளித்து வருவதை முதல்வர் பாராட்டினார்.
2 வெளிநாட்டு கிளை உட்பட இந்தியா முழுவதும் இந்தியன் வங்கிக்கு 1,796 கிளைகளும், 1,062 ஏடிஎம் மையங்களும் உள்ளன. மேலும் 250 ஏடிஎம் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் 768 கிளைகளும் 532 ஏடிஎம் மையங்களும் உள்ளன. விரைவில், இலங்கையில் கொழும்பு, கண்டி, இந்தோனேசியாவில் ஜகார்த்தா, சிங்கப்பூரில் கிளைகள் திறக்கப்பட உள்ளன. ஹாங்காங்கிலும் கிளை தொடங்கப்படும்.
இலங்கையில் தமிழர் பகுதியில் புனரமைப்பு பணிகளுக்கு ஸீ500 கோடி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியை மக்களிடம் சேர்ப்பதற்காக, யாழ்ப்பாணத் தில் விரைவில் வங்கி கிளை தொடங்கப்ப டும். அங்குள்ள மக்க ளின் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்படும்.
இவ்வாறு பாசின் கூறினார்.
No comments:
Post a Comment