125 கோடியே 35 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் பள்ளி மாணவ மாணவியருக்கு இனி வாரம் ஐந்து நாட்கள் சத்துணவுடன் முட்டை வழங்கப்படும் என, முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, அண்ணா நூற்றாண்டு நினைவாக இந்த பிரம்மாண்டமான நூலகத்தைத் திறந்து வைக்கும் இந்நேரத்தில் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்க்கும் வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் வேக வைத்த முட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பினை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரும் நோக்கில், தற்போது பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு வாரத்தில் மூன்று நாட்களில் சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்பட்டு வருவதை, இனி வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் சத்துணவுடன் வேக வைத்த முட்டையை வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
125 கோடியே 35 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் பள்ளி மாணவ மாணவியருக்கு இனி வாரம் ஐந்து நாட்கள் சத்துணவுடன் முட்டை வழங்கப்படும் என, முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, அண்ணா நூற்றாண்டு நினைவாக இந்த பிரம்மாண்டமான நூலகத்தைத் திறந்து வைக்கும் இந்நேரத்தில் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்க்கும் வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் வேக வைத்த முட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
மேலும், முட்டை உண்ணாத மாணவ மாணவியர்க்கு வாரத்தில் ஐந்து நாட்களிலும் முட்டைக்குப் பதிலாக வாழைப்பழம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார். சத்துணவுடன் ஐந்து முட்டை வழங்கும்
அந்த அறிவிப்பினை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரும் நோக்கில், தற்போது பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு வாரத்தில் மூன்று நாட்களில் சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்பட்டு வருவதை, இனி வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் சத்துணவுடன் வேக வைத்த முட்டையை வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
மேலும், முட்டை உண்ணாத மாணவ மாணவியர்க்கு வாரத்தில் ஐந்து நாட்களிலும் முட்டைக்குப் பதிலாக வாழைப்பழம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார். சத்துணவுடன் ஐந்து முட்டை வழங்கும்
இத்துடன், சத்துணவுக் கூடங்களில் காய்கறி, விறகு ஆகிய செலவுகளுக்காக ஒரு குழந்தைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 44 பைசா என்பதும் உயர்த்தி வழங்கப்படும்.
இந்த ஆணையின் காரணமாக 57 இலட்சத்து 75 ஆயிரம் பள்ளி மாணவ மாணவியர் பயன் பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு 125 கோடியே 35 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment