கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 3, 2010

திமுக ஆட்சி மாறாது; அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேறும்; போராட்டம் வேண்டாம்! - முதலமைச்சர் கலைஞர் விளக்கம்



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாற்றுத்திறனாளிகள் ஆங்காங்கு போராட் டம் நடத்துவதாகவும்-ஆர்ப்பாட்டம் நடத்துவ தாகவும்-உண்ணாவிர தம் இருப்பதாகவும் ஒரு சில ஏடுகளில் செய்திகள் வருகின்றன. மாற்றுத் திறனாளிகள் அனைவ ருக்கும் வேலை வழங்க வேண்டும் அல்லது வேலையில்லா கால நிவாரணமாக மாதந்தோ றும் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழகம் முழுவ தும் செப்டம்பர் 3ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதிவரை மாற்றுத் திற னாளிகள் போராட்டம் நடத்தவிருப்பதாக அவர் களுக்கான சங்கம் ஒன்று அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளை பற்றி எந்தவொரு தரப் பினரும் கவலைப்படாத நிலையில் நான் தான் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு 2010-11ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 87 முதல் 93 வரை 7 பத்திகள் எழுதப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையி லும் மாற்றுத்திறனாளி கள் நலன் குறித்து 7 பத்திகள் எழுதப்பட வில்லை. அதற்கு கைமா றாகத்தான் அந்த மாற் றுத்திறனாளிகளில் ஒரு சிலர் அரசுக்கு எதிரான இதுபோன்ற போராட் டங்களில் ஈடுபடுகிறார் கள்.

எனினும் மாற்றுத்திற னாளிக ளுக்காக நிதி நிலை அறிக்கையில் இந்த அரசு குறிப்பிடும் போது, ``மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த ``மாற்றுத்திறனாளிகள்'' பெற்றிட நிர்ணயிக்கப் பட்டுள்ள வருவாய் உச்ச வரம்பு முற்றிலும் நீக்கப் படும். மாற்றுத்திறன் உடையோர் உயர்கல்வி பயில்வதற்கு ஏதுவாகக் கல்வி கட்டணம் செலுத் துவதில் இருந்து விலக்க ளித்த இந்த அரசு, வரும் கல்வி ஆண்டில் இருந்து தனிக்கட்டணம் செலுத் துவதில் இருந்தும் விலக் களிக்கும்.

அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் ``மாற்றுத்திறனாளி'' மாணவர் இல்லங்களில் தங்கிப்படிக்கும் மாண வர்களுக்கு, உணவுச் செலவாக மாதம் ஒன் றுக்கு தற்போது அளிக்கப் பட்டு வரும் ரூ.200 உதவித்தொகை, ரூ.450 ஆக உயர்த்தப்பட்டு இனி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வாரியம்

இந்தியாவிலேயே முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு அளித்து நலத்திட்ட உதவிகள் வழங்க தனி நலவாரியம் தமிழ்நாட்டில் தான் அமைக்கப்பட்டுள்ளது. தங்களை தாங்களே பராமரித்துக்கொள்ள இயலாத மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, வரு வாய் உச்சவரம்பு இன்றி ரூ.500 வீதம் மாதாந்திர உதவித் தொகையை இந்த அரசு வழங்கி வருவதால் 50 ஆயிரம் பேர் பயன் பெற்று வருகின்றனர்.

கண் பார்வையற் றோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிக ளுக்கு பல் வேறு உதவித்தொகைகள் இரட்டிப்பாக்கப்பட் டுள்ளன. அவர்கள் ஆசி ரிய பணிபுரிய சிறப்பு வேலைவாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. காது கேளா தோருக்கு குழந்தைப்பரு வத்தின் தொடக்கத்தி லேயே கண்டறிந்து சிறப்புக் கல்வி அளிக்கும் பள்ளி கள் மாவட்டந்தோறும் தொடங்கப்பட்டுள்ளன.

கை, கால் ஊனமுற் றோருக்கு பயணச்சலுகை களுடன், நாட்டிலேயே முதல்முறையாக மோட் டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் முதலான பல்வேறு உதவிக் கருவிகள் வழங்கப்பட் டுள்ளன. வேலைவாய்ப் பற்ற பார்வையற்றோ ருக்கு நிவாரணத்தொகை வழங்கும் திட்டம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிக ளுக்கும் விரிவுபடுத்தப் பட்டு 60 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் 2008-2009 ஆம் ஆண்டிலிருந்து 1000 பேருக்கு மாத உதவித் தொகையாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. 2005-2006 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு செலவிடப் பட்ட தொகை ரூ.49 கோடி அளவாக இருந் ததை, வரும் நிதியாண்டில் ரூ.176 கோடியாக உயர்த் தியுள்ளதுடன் மாற்றுத் திற னாளிகளுக்கான தனித் துறை என்னுடைய நேரடி மேற்பார்வையில் இயங் கும்'' என்று எழுதப்பட்டி ருந்தது.

இன்னும் சொல்லப் போனால், அவர்களை யெல்லாம் ஊனமுற் றோர்'' என்று அழைப் பதை தவிர்த்து அவர் களின் தனிப்பட்ட திற மைகளை கருத்தில் கொண்டு மாற்றுத்திற னாளிகள்'' என்று அழைக்கப்பட வேண்டு மென்று அறிவிக்கப் பட்டதே இந்த ஆட்சி யிலே தான்.

பார்வையற்றோர்க்கு வழங்கப்படுவதைப் போன்று ஏனைய வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்று திறனாளிகளுக் கும் வேலைவாய்ப்பற் றோர் நிவாரணத் தொகை- பட்டதாரிக ளுக்கு ரூ.450ஆம், 12 ஆவது படித்தவர்க ளுக்கு ரூ.375ஆம், பத் தாம் வகுப்பு மற்றும் அதற்கு குறைவாக படித் தவர்களுக்கு ரூ.300ஆம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இதற்கு முன்பு இருந்த ஆட்சி யில் ஒரு ரூபாய் கூட வழங்கப்பட வில்லை.

2010-2011 ஆம் ஆண்டு மானிய கோரிக் கையின் அறிவிப்பின் படி மாற்றுத்திற னாளிகளுக் கான துயர் உறுவோர் நிவாரண நிதி'' ஒன்று ஏற்படுத்தப் பட்டது. இத்திட்டத் தின்கீழ் கடும் வன் முறைச் செயல்களால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட நிவாரணநிதி ஒன்று ஏற்படுத்தப் பட்டு, ஒவ்வொரு மாவட்டத் திற்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை பகிர்ந் தளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு; ஒன் றுக்கு மேற்பட்ட குறை பாடுடைய மாற்றுத்திற னாளிகள் மற்றும் கடு மையாகப் பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனா ளிகள் 1500 பேருக்கு இலவசமாக மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளது. கடும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனா ளிகள் கை, கால்களின் தசை இறுக்கமாக இருப் பதாலும், இவர்களது தனிப்பட்ட தேவை களின் அடிப்படையில், புதிதாக வடிவமைக்கப் பட்ட சிறப்பு நாற்காலி கள் அரசால் 500 பேருக்கு முதல்கட்ட மாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினருக் கும் அந்தந்த தொகுதி யில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வாங்கி வழங்கவென ரூ.5 லட்சம் வீதம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி களுக்காக கழக அரசின் சார்பில் செய்யப்பட் டுள்ள சாதனைகள் பல முறை தெரிவிக்கப்பட்டி ருப்பதால், அதனை மீண்டும் விளக்கிட நான் தற்போது விரும்பவில்லை.

யாருமே கவலைப்படாத நேரத்தில்

தமிழக அரசின் சார் பில் மாற்றுத்திறனாளி களுக்காக இவ்வளவு காரியங்களை செய்யும் போது, அதை எதிர்த்து போராட்டம் நடத்துகி றீர்களே, உண்ணாவிர தம் இருக்கிறீர்களே என்று நானே ஒருமுறை பொது மருத்துவமனை யிலே அவர்கள் உண்ணா விரதம் இருந்தபோது நேரில் கேட்டேன். அப் போது அவர்கள் தரப் பில் என்னிடம் கூறப் பட்ட பதில்-" நீங்கள் எங்களுக்காக எதுவும் செய்ய வேண்டிய தில்லை. இரண்டு நாள் களாக உண்ணாவிரதம் இருந்த எங்களைப் பற்றி யாருமே கவ லைப்படாத நேரத்தில் முதலமைச்ச ராகிய தாங்களே இந்த காலை நேரத்தில் உணவு கூட அருந்தாமல் வந்து சந்தித்ததே போதுமா னது'' என்று கூறினார் கள்.

அப்போது நான் அவர்களிடம் இந்த அரசின் சார்பில் உங் களுக்கு அடுத்தடுத்து சலுகைகளை செய்து வரும்போது, இவ்வாறு யாரிடமும் முறையிடா மல் நேரடியாக உண் ணாவிரதத்தில் ஈடுபடு வது நியாயம்தானா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நாங் கள் இதற்கு முன்பி ருந்த ஆட்சிக்காலத்தில் இப்படியெல்லாம் கேட்டுப் போராட்டம் நடத்தியதில்லைதான். இந்த ஆட்சியிலேதான் போராட்டம் நடத்து கிறோம், உண்ணாவி ரதம் இருக்கிறோம். காரணம் இப்போது கேட்டால் தான் ஏதா வது நடக்கும், எங்க ளுக்கு விடியல் பிறக் கும். அ.தி.மு.க. ஆட்சி என்றால் காவல் துறை யினரை விட்டு எங் களை விரட்டி அடிப் பார்கள், கேட்க நாதியே இருக்காது. இப்போது போராட்டம் நடத்தக் காரணமே எப்படியா வது உங்கள் காதுக ளுக்கு செய்தி எட்டி னால் உடனடியாக விடிவுகாலம் பிறக்கும் என்பதால்தான் இப் படியெல்லாம் செய்கி றோம். நாங்கள் வைக் கின்ற கோரிக்கைகளே அதிகபட்சம் என்பது எங்களுக்கு தெரிந்தி ருந்தும் - விடிவுகாலம் பிறக்கும் என்பதால் தான் கேட்கிறோம் என்று சொன்னார்கள்.

என்னைப்பொறுத்த வரையில் மாற்றுத்திற னாளிகள் மட்டுமல்ல, யாருக்குமே எந்தவித மான சிரமமும் இல்லா மல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பது தான். அதற்காகத்தான் நான் இந்த வயதிலும் இரவு பகலாக உழைக் கிறேன், சிந்திக்கிறேன். யாருக்கு என்ன செய் தால், அவர்களுக்கு நல் வாழ்வு ஏற்படும் என்று தான் நினைத்துக் கொண்டே இருக் கிறேன். முடிந்த அளவுக்கு திருப்தி

ஆனால் அரசு ஒன்று இருக்கும் போது, அந்த அரசினால் எந்த அள விற்கு செலவழிக்க முடி யும் என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக் கிறது அல் லவா? அரசிடம் இருக் கின்ற நிதியைக்கொண்டு அனைத்துத் தரப்பினரை யும் முடிந்த அளவிற்கு திருப்தி செய்ய வேண்டு மென்பதுதான் என்னு டைய எண்ணம். அதுவும் இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் வரப் போகிறது என்றதுடன், அதற்குள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டு மென்று அனைத்துத் தரப் பினரும் எண்ணுகிறார் கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் முறை தான் போராட்டம் என்ப தெல்லாம்!

அப்பாவிகளைத் தூண்டிவிட்டு

உண்மையில் அவர்க ளுக்கு இந்த அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டுமென்பது நோக்கமல்ல. அதே நேரத் தில் ஒருசில அரசியல் வாதிகள் தங்கள் சங்கங் களை வளர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த அப்பாவிகளை தூண்டிவிட்டு குளிர்காய எண்ணுகிறார்கள். அது வும் அந்த அலுவலர் களுக்கு தெரிகிறது என்ற போதிலும் தங்களையும் அறியாமல் ஆளாகிவிட நேரிடுகிறது என்பதை நான் நன்கறிவேன்.

பொதுத்தேர்தல் நெருங்குகிறது என்பதற் காக போராட்டம் நடத்த முற்படுவோருக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். இந்த ஆட்சி மாறிவிடும், பிறகு உங்கள் தேவைகள் எதுவும் நிறைவேறாது என்றெல்லாம் நீங்கள் பயப்படத்தேவையில்லை. நிச்சயமாக ஆட்சி மாறாது! ஏன் மாறப் போகிறது? இந்த ஆட்சி யிலே உங்கள் தேவைகள் கவனிக்கப்படவில்லையா? எந்தத் தரப்பினராவது புறக்கணிக்கப்பட்ட துண்டா? ஊழல்கள் நடைபெற்றது உண்டா?

ஒத்துழைக்க முன்வாரீர்

உங்களுக்காக இந்த அரசின் சார்பில் அறி விக்கப்பட்ட சலுகை களை நீங்கள் அறிய மாட்டீர்களா? அந்தச் சலுகைகளையெல்லாம் நீங்கள் பெறுகிறீர்களா இல்லையா? அந்த அறிவிப்பின் வாயிலாக நடத்தப்படும் திட்டங் களில் ஏதாவது குறை உண்டா, ஊழல் உண்டா? சுமார் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு வண் ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வாங்கித் தரப்பட்டுள்ளதே, அதிலே ஏதாவது புகார் கள் வந்ததுண்டா? ஆனால் இந்த ஆட்சி யிலே அனைத்துக் கட்சி யினரை கொண்டு குழு அமைத்து, அந்த குழு வினை அழைத்து அவர் கள் முன்னிலையில்தான் `டெண்டர்'களே திறக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த விவரங்களையெல் லாம் தமிழ்நாட்டு மக் கள் அறிய மாட்டார் களா? எனவே ஆட்சி மாறி விடும், உங்கள் கோரிக்கைகள் நிறை வேறாமலே போய்விடும் என்றெல்லாம் நினைக்கத் தேவை யில்லை.

எனவே, இந்த அரசை எதிர்த்துப்போராட்டம், ஆர்ப்பாட்டம், உண் ணாவிரதம் என்பதை யெல்லாம் கைவிட்டு, இந்த அரசின் முயற்சி களுக்கு ஒத்துழைக்க முன்வாரீர், முன்வாரீர் என்று அழைக்கிறேன் என்று கூறியுள்ளார் கலைஞர்.

No comments:

Post a Comment