மதுரை எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள 3 திருமண மண்டபங்கள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உத்தங்குடியில் நேற்று நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி தலை மை வகித்தார். திருமண மண்டபங்களை திறந்து வைத்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி பேசியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறேன். எம்பி தொகுதி நிதி ஆண் டுக்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்படுகிறது. இது போதாது. எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. ஒன்றரை கோடி ஒதுக்கப்படுகிறது. எனவே 6 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கிய எம்.பி. தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ. 9 கோடி ஒதுக்க வேண்டும். இதை பிரதமர், நிதி அமைச்சரிடம் வலியுறுத்தி உள் ளோம்.
எனது பிறந்த நாள், முதல்வர் பிறந்த நாள், அண் ணா பிறந்த நாளை முன்னிட்டும் ஏழைகளுக்கு உதவி கள் அளிக்கிறோம். மதுரை மாவட்டத்தில் 150 மருத்துவ முகாம் நடத்தி உள்ளோம். கடைசியாக ஆண்டிபட்டியில் மருத்துவ முகாம் நடத்தி உதவிகள் வழங்கினோம். உடனே ஜெயலலிதா என் தொகுதி யில் எப்படி நடத்தலாம்? என்று கேட்கிறார். ஆண்டிபட்டி தொகுதி பக்கமே வராதவர். ஒரு நாளாவது சட்டமன்றத்தில் ஆண்டிபட்டி தொகுதிக்கு என்ன செய்ய வேண்டும் என பேசி யது உண்டா? அங்குள்ள மக்களுக்கு நாங்கள் செய்யும் நன்மைகள், திட்டங்களுக்கும் தடை போடுகிறார். அரசு நலத்திட்டங்களுக்கும் தடை போட நினைக்கிறார்.
ஆண்டிபட்டியில் நடத்திய முகாமில் 12 ஆயி ரம் பேர் மருத்துவ உதவி பெற்றனர். அதில் ஏழைகளுக்கு ஹார்லிக்ஸ் டப்பா வழங்கினேன். அதை திருடி கொடுத்ததாக ஜெயலலிதா கூறுகிறார். வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் திருடி ஏழைகளுக்கு தானே கொடுத்தேன். திருடாதே படத்தில் எம்.ஜி.ஆர். பணத்தை திருடி ஏழைகளுக்கு கொடுப்பார். அதற்காக நான் திருடியதாக கூறவில்லை. நான் வழங்கியது 200 கிராம் ஹார்லிக்ஸ் டப்பா. ஜெயலலிதா கூறு வது 500 கிராம் ஹார்லிக்ஸ் பாட்டில்.
மதுரையில் ஜெயலலிதா இந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சொல்லி விட்டு, அவரே ஒரு மொட் டை கடிதத்திற்கு ஏற்பாடு செய்து விட்டு ‘அழகிரி குண்டு போட்டு விடுவார்’ என்று தள்ளி வைத்து விட் டார். இப்போது அக்டோபர் 18&ல் மதுரையில் ஆர்ப்பாட்டம் என்கிறார். இவ் வளவு காலமும் மக்களை யோ, கட்சிக்காரர்களையோ சந்திக்காமல் எங்கே போனார்? திடீரென்று இப்போது வெளியே வந்து, மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக நாடகமாடுகிறார். முதல்வர் கருணாநிதி தினமும் 4 மணி நேரம் மட்டும் தூங்கி, மற்ற நேரங்களில் மக்களுக்காக உழைக்கிறார். அண்ணா அறிவாலயம் வந்தால், வருக சுவரொட்டி ஒட்டுவது கிடையாது.
ஆனால் ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து திடீரென்று ஒரு நாள் அ.தி. மு.க. கட்சி ஆபீசுக்கு வரு கிறார். அவரை பராசக்தியே, தர்மத்தாயே, புரட்சி தாயே வருக என வரவேற்பு சுவரொட்டி அச்சிட்டு ஒட்டுகிறார்கள். அவர் மதுரை யில் போராட்டம் நடத்தி விட்டு போகட்டும். முதல்வர் எங்களை அடக்கி வாசிக்கும்படி சொல்லி இருக்கிறார்.
அக்டோபர் 18ந் தேதி அவர் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு பதில் அதிகம் இருக்கும். நிறைய தகவல்களை வெளியிடுவேன். இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.
No comments:
Post a Comment