அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது.
அப்போது டெல்லி விமான நிலையத்திலேயேஅண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப்புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணியஅந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம்.
விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.
சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர்கேட்டாராம். “டூ யு நோ யுனொ ?
சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.
ஐ நோ யுனொ.
யு நோ யுனொ.
ஐ நோ யு நோ யுனொ
பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ!
கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான்.
தட்டுத்தடுமாறிக் கேட்டாராம்.எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம்.
அண்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?
I know UNO(United Nations Organisation).You know UNO..I know you know UNO.But I know UNO better than you know UNO.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
“because என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?”
என்று கேட்டதும் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
***
மேலும் சில நகைச்சுவை தகவல்கள்:
அண்ணா காஞ்சி சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக நின்றார். ஆனால் தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் வென்றார். அவர் அண்ணாவிடம் வந்து, ‘I am sorry.’ என்றாராம்.
அண்ணா, ‘I am not a lorry to carry your sorry!’ என்றாராம்!
*
அண்ணவிடம் ஒருவர்:
Give us a defintion of Union
என்று கேட்டாரம்.
அண்ணா அதற்கு:
Union is Oninion.
என்று பதில் சொன்னாராம்.
*
அண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டசபையில் நடந்த சூடான விவாத்த்தில், எதிர்கட்சியைச் சேர்ந்தவர், கோபமாக அண்ணாவைப் பார்த்து:
‘Your days are numbered’
என்றார். அதாவது, நீங்கள் சீக்கிரம் ஆட்சியை விட்டு போகும் காலம் எண்ணப்படுகிறது என்றார்.
அண்ணா அதற்கு:
‘But our steps are counted’
என்றார். அதாவது எங்களது சாதனைகள் கவனிக்க்ப்படுகின்றன என்றார்.
*
அண்ணாமலைப்பல்கலைக்கழகம் ஒரு காங்கிர்ஸ் கோட்டை. அங்கு அண்ணா மாணவர் மன்றத்தில் உரையாற்ற்ச்சென்றார்.
காங்கிர்ஸ் மாணவர்கள் அண்ணாவுக்கு ஆங்கிலம் வராது. அவரை அவமானப்படுத்த வேண்டும் என நினைத்து, ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என்றனர்.
‘என்ன தலைப்பில்?’ என்று கேட்டார்.
’தலைப்பை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்றனர்.
அப்போது அண்ணா குழம்பி விடுவார். அல்லது தனக்கு இலகுவான ஒன்றைத் தேர்ந்தெடுப்பார் என நினைத்தனர்.
அண்ணா மேடையை நோக்கினார். பின்னர் கூட்டத்தை நோக்கினார். அப்பொது முன்வரிசையில் இருந்த ஒருவர் தீக்குட்சியக்கொழுத்தி, தன் சிகரெட்டைப் பற்ற வைத்தார்.
இதைக்கவனித்த அண்ணா: ‘Yes, SPARK is my topic today’ என்று தொடங்கி நெருப்பு என்ற தலைப்பில் ஆங்கில உரையாற்றி அமர்ந்தார். காங்கிரஸ் மாணாவர்கள் கரகோஷம் எழுப்பித்தானே ஆகவேண்டும்?
No comments:
Post a Comment