கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, September 13, 2010

மதுரை விமான நிலையத்தில் இருந்து அயல்நாட்டு விமான போக்குவரத்து - மு.க.அழகிரி



மதுரை விமான நிலையத்தில் ஸீ130 கோடியில் புதிய டெர்மினல் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நேற்று மாலை நடைபெற்றது. மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில், ‘2008ல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த புதிய டெர்மினல், 2 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டு பெரிய விமான நிலையமாக உருமாறியுள்ளது. சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும் சென்னை அல்லது திருச்சி விமான நிலையங்களுக்கு செல்லவேண்டியுள்ளது. எனவே, மதுரையிலிருந்து விரைவில் சர்வதேச விமானங்களை இயக்க வேண்டும்’ என்றார்.
விழாவுக்கு தலைமை வகித்து மத்திய சிவில் விமானப்போக்குவரத்து இணை அமைச்சர் பிரபுல் பட்டேல் பேசுகையில், ‘சென்னை விமான நிலையத்தை, டெல்லி, மும்பை, கொல்கட்டா, ஐதராபாத் போல நவீனப்படுத்த ஸீ2 ஆயிரம் கோடியில் பணிகள் நடந்து வருகிறது. அதே முக்கியத்துவம் மதுரை விமான நிலையத்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சர்வதேச விமானங்களை மட்டுமின்றி சரக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் வகையில் சர்வதேச கார்கோ (சரக்கு) விமான போக்குவரத்தையும் துவக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்மூலம் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலை மற்றும் விவசாய உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும்’ என்றார்.
புதிய டெர்மினலை திறந்து வைத்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இந்த 6 ஆண்டு காலத்தில் ஏற்பட்டுள்ளது. 9 சதவீதத்தை எட்டியுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப, சாலை, கப்பல், விமானப் போக்குவரத்து கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை, டெல்லி, கொல்கட்டாவுக்கு இணையாக சென்னை, திருச்சி விமான நிலையஙகள் நவீனமாக்கப்பட்டு வருகின்றன. மதுரையிலிருந்து அயல்நாட்டு விமானப்போக்குவரத்தை துவக்குவது குறித்து ஏர் ஆபரேட்டர்ஸ் கூட்டம் வரும் 17ம் தேதி சென்னையில் நடக்கிறது. மதுரை விமானநிலையத்தில் இருந்து, அயல்நாட்டு விமானப்போக்குவரத்து 4 மாதத்தில் துவங்கும்.மதுரையை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கட்டா, பெங்களூருடன் நேரடியாக இணைக்கும் உள்நாட்டு சிவில் விமானப்போக்குவரத்தையும் துவக்க வேண்டும்.

No comments:

Post a Comment