ஓய்வு பெற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ^6 கோடியே 86 லட்சம் கருணை ஓய்வூதியம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்களுக்கு 1995ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 1995ம் ஆண்டுக்கு முன்பு பணியாற்றி ஓய்வு பெற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை மனு அளித்தது. அதை அரசு ஏற்றது.
இதையடுத்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பணியாளர்கள் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் வராத 1987 முதல் 1995 வரை உள்ள காலத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ^2,500 வீதம் கருணை ஓய்வூதியம் அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்படும். பணியாளர் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் பயன் பெற்று வருபவர்களுக்கு குறைந்த பட்சம் ^2,500 ஓய்வூதியம் பெறத்தக்க வகையில் அவர்கள் ஏற்கெனவே பெற்று வரும் ஓய்வூதியத் தொகையுடன் தேவைப்படும் கூடுதல் தொகையை அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளே ஏற்று ஓய்வூதியம் வழங்கப்படும்.
பணியாளர்கள் ஓய்வு ஊதிய திட்டம் 1995ன் கீழ் பயன்பெற்ற மறைந்த, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள், குடும்ப ஓய்வூதிய தொகையாக குறைந்த பட்சம் ^1,250 பெறத் தக்க வகையில் ஏற்கெனவே பெற்றுவரும் தொகையுடன் கூடுதலாக தேவைப்படும் தொகையை அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளே வழங்கும் என்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் மூலம் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ^6 கோடியே 86 லட்சம் கூடுதலாக செலவாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment