கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, September 20, 2010

கன்னியாகுமரியில் கலைஞர்


நாகர்கோவிலில் பொருள்காட்சி திடலில் திமுக முப்பெரும் விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று (19.09.2010) இரவு சென்றார்.


தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் முதல்வர் கருணாநிதி பெரும்பாலும் ரயில் மூலமாகவோ, அல்லது காரிலோ பயணம் செய்வார். நீண்ட நாள்களுக்குப் பின் தற்போது விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு சென்றுள்ளார். அவரை அமைச்சர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்ளிட்ட மாவட்ட திமுக பிரமுகர்கள் வரவேற்றனர்.


பின்னர் திருவனந்தபுரத்திலிருந்து கார் மூலம் குமரி மாவட்டத்துக்கு வந்த முதல்வருக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளையில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, உள்ளிட்ட திமுகவினர் திரளாகப் பங்கேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் களியக்காவிளையிலிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு வந்த முதல்வர் கருணாநிதி அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.


முதல்வருடன் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு, பூங்கோதை, எம்.பி.க்கள் கனிமொழி, தங்கவேலு உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.


No comments:

Post a Comment