கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 17, 2010

இளைஞர்கள், மாணவர்கள் திமுகவின் கொள்கை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்



திமுக இளம் சொற்பொழிவாளர்கள் பயிற்சி பட்டறை, ஊட்டியில் நேற்று தொடங்கியது. மத்திய அமைச்சர் ராசா வரவேற்றார்.
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, சாமி நாதன், ராமச்சந்திரன், திருச்சி சிவா எம்.பி, நடிகை குஷ்பு, முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி, முன்னாள் அரசு கொறடா முபாரக், கோவை ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பெரியார் இல்லையென்றால் சுய மரியாதையுடன் நாம் வாழ்ந்திருக்க முடியாது. அண்ணா இல்லையென்றால் மனிதனாக மாறியிருக்க முடியாது. திராவிட இயக்க பாசறைகளை உருவாக்கி, சீர்திருத்த கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். திராவிட இனம், பாரம்பரியம் நிலைத்து நிற்க திராவிட இயக்கங்கள் உழைத்து வருகின்றன.
இந்த பாசறை மூலம் நல்ல கருத்துக்கள் மக்களுக்கு செல்ல வழியுள்ளது. திமுகவில் உள்ள 60 சதவீதம் பேர் அதன் கொள்கைகளை பற்றி தெரியாமல் உள்ளனர். அதை மாற்ற வேண்டும். நான் கூட முழுமையாக பயிற்சி பெற்றதில்லை.
அதனால் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற வந்துள்ளேன். அனைவரும் திமுகவின் கொள்கை பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற பாசறைகளில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு திராவிட பாரம்பரியத்தை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார். பாசறையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திமுக இளைஞரணியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment