கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 17, 2010

அண்ணா பிறந்தநாள் விழா தி.மு.க. இளைஞரணி சார்பில் மாணவர்களுக்கு போட்டிகள்


துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி அறக்கட்டளை நிறுவனருமான மு.க.ஸ்டாலின் 14.09.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
அண்ணாவின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டிகள் நடக்கின்றன.
வரும் 18, 19 தேதிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம். அக்டோபர் 2, 3 தேதிகளில் வடசென்னை, தென்சென்னை மாவட்டங்களுக்கான போட்டிகளில் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கிறார்.
வரும் 18, 19 தேதிகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, அக்டோபர் 2, 3 தேதிகளில் சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கான போட்டிகளில் சுகவனம் எம்.பி. கலந்து கொள்கிறார். வரும் 18, 19 தேதிகளில் நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், அக்டோபர் 2. 3 தேதிகளில் மதுரை , விருதுநகர் மாவட்டங்களுக்கான போட்டிகளில் ஆர்.ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொள்கிறார்.
வரும் 18, 19 தேதிகளில் கடலூர், புதுவை மாநிலம், விழுப்புரம், அக்டோபர் 2, 3 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான போட்டிகளில் சுப.த.சம்பத் கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 18, 19 தேதிகளில் கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, அக்டோபர் 2, 3 தேதிகளில் திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கான போட்டிகளில் சுபா.சந்திரசேகர் கலந்து கொள்கிறார். செப்டம்பர் 18, 19 தேதிகளில் தஞ்சை, திருவாரூர், நாகை, அக்டோபர் 2, 3 தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கான போட்டிகளில் அசன்முகமது ஜின்னா பங்கேற்கிறார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment