கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 3, 2010

தமிழகத்திலே கண்ணீரை காணாத நிலையை உருவாக்குவதுதான் தி.மு.க. அரசின் குறிக்கோள் - முதலமைச்சர் கலைஞர் உருக்கம்



1.9.2010 அன்று சென் னை மியூசிக் அகாடமி யில் நடை பெற்ற மாநிலங்கள வை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி தொகுத்த கலைஞர் 87 நூல் வெளி யீட்டு விழாவில் முதலமைச் சர் கலைஞர் ஆற்றிய உரை.

இப்படி நடக்கக் கூடாது

இந்தத் தொகுப்பு நூலில் வசந்தி ஸ்டான்லி எழுதிய கட்டுரையில் கடைசி வரி கள் என்னுடைய உள்ளத் தில் எத்தனையோ உணர் வுகளை ஏற்படுத்தியிருக் கின்றது. அப்பா! என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில் விழியோரம் ஒரு சொட்டு நீர் உருண்டு வரும். அது உங்கள் பாதத்தை நனைத்தால் நன்றிக் கடனைத் தீர்த்த பாக்கியத் தை நான் அடைவேன் அப்பா! என்று வசந்தி ஸ்டான்லி எழுதியிருக் கிறார். இது என்னுடைய உள்ளத்தை உருக்குவதாக இருந்தாலுங்கூட, இப்படி ஒன்று நடக்கக் கூடாது என்று நான் விரும்புகின் றேன். ஆயுள் அடங்குகின்ற கடைசி நொடியில் விழி யோரம் சொட்டு நீர் உருண்டு வரும், அது உங் கள் பாதத்தை நனைத்தால் நன்றிக் கடனைத் தீர்த்த பாக்கியத்தை அடைவேன் அப்பா என்று எழுதியது போல நடக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.

இந்த இயக்கத்தில் யார் என்னை விட்டுப் பிரிந் தாலும் இந்த இயக்கத் தினுடைய தொண்டினைத் தொடராமல் உயிர் விட் டாலும் அது நடக்கக் கூடாது என்று கருதுகி றவன் நான், எனவே தான் வசந்தி ஸ்டான்லி போன்ற கழகத்தினுடைய கருவூலம் போன்றவர்கள், கழகத்தினு டைய ஆற்றல் மிக்க தொண்டுள்ளம் படைத்த வர்கள் பல காலம் இருந்து எந்தக் கொள்கைக்காக தந்தை பெரியாரும், பேரறி ஞர் அண்ணாவும் அவர் கள் வழி நின்று நாங்களும் பாடுபட்டு வருகிறோமோ, அந்தக் கொள்கைகளை வெற்றிகரமாக நிறை வேற்றித் தீருவோம் என்று ஒரு சூளுரை மேற்கொண்டு இந்தக் கட்டுரை முடிக்கப் பட்டிருந்தால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைந் திருப்பேன். அதை விட்டு விட்டு என்னுடைய விழி யோரம் ஆயுள் அடங்கும் நேரத்திலே உருண்டோடு கின்ற ஒரு சொட்டு நீர், உங்களுடைய காலடியை நனைத்தால், அதுவே எனக்குப் பாக்கியம் என்று எழுதியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது, நான் விரும்பாதது, யாரும் இதை ரசிக்க முடியாதது.

தமிழர் தலைவரின் கட்டுரை

கலைஞர் 87 என்று வசந்தி ஸ்டான்லி தொகுத்துள்ள இந்நூலில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலைஞர் அவர்களைப் பாராட்டி எழுதிய செய்தியும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் வசந்தி யைப் போன்ற, கொள்கை உறுதி படைத்தவர்கள் இந்த இயக்கத்திற்கு நிரம்பத் தேவை. எனவே தான் உங் களையெல்லாம் இழக்க நான் தயாராக இல்லை. உங்களுடைய கண்களிலே இருந்து உருண்டு வருவது கண்ணீர் துளியாக இருந்தா லும், ஏன் அது பன்னீர் துளியாக இருந்தாலும்கூட நான் அதை ஏற்க மாட் டேன். ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி, கண்ணீர் விடுங் கள் என்று சொல்லவும் மாட்டேன். கண்ணீரைத் துடைப்பது தான் கழகத் தின் நோக்கம் (கைதட்டல்).

கண்ணீரை காணாத நிலை

கண்ணீரை தமிழகத்தி லே காணாத நிலையை உருவாக்குவது தான் கழக அரசின் குறிக்கோள். அப் படிப்பட்ட குறிக்கோளும், நோக்கமும் கொண்ட அரசை நடத்துகின்ற ஒரு தலைவனைப் பார்த்து, என்னுடைய கண்ணீர் உன் பாதத்தை நனைக்கட்டும் என்று சொன்னால், அந்தச் சோகச் சித்திரத்தை எழுத்து வண்மைக்காகப் பாராட்டலாமே தவிர, உண் மையிலேயே நடக்காமல், நடக்கக் கூடாது என்ற அந்த உறுதியைத் தான் நான் மேற்கொள்ள விரும்புகி றேன். ஓர் அருமையான புத்தகம். என்னைப் பற்றி 87 பேர் எழுதியிருக்கிறார்கள், கருத்து அறிவித்திருக்கிறார் கள். என்னுடைய நெருங் கிய நண்பர்கள், நிரந்தரப் பகைவர்கள் என்போர் எல்லாம்கூட பாராட்டி யிருக்கிறார்கள். எனவே தம்பி வைரமுத்து குறிப் பிட்டதைப் போல, பீட்டர் அல்போன்ஸ் எடுத்துக் காட்டியதைப் போல இது எதிர்காலத்திற்குப் பயன் படக் கூடிய ஓர் ஆவணம். அந்த ஆவணத்தைத் தயாரித்துக் கொடுத்த வகையில் வசந்தி ஸ்டான்லி அவர்களுக்கு நான் பெரி தும் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் மா நிலங்களவை உறுப்பின ராக இருந்து அங்கே தரு கின்ற ஊதியத்தைப் பெற்று வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை நடத்தியிருக்கலாம். கழகத் திலே ஒரு சிறந்த சொற் பொழிவாளர் என்ற முறை யில், வெளியூர் களுக்குச் சென்று ஒளி மிகுந்த பிரச் சாரங்களைச் செய்து இந்தக் கழகத்திற்கு வழிகாட்டி யிருக்கலாம். மற்றவர்களுக் கெல்லாம் வழிகாட்டியாக இப்படியொரு புத்தகத்தை வெளியிடவேண்டும், அதை கழகத்தின் ஆவணமாக ஆக்கவேண்டும் என்று வசந்தி ஸ்டான்லிக்குத் தோன்றியிருக்கிறது என்றால், இது பாராட்டத் தக்க, போற்றத்தக்க, புகழத் தக்க ஒரு செயல் என்பதை நான் சொல்லாமல் இருக்க முடியாது.

ஒரே ஒரு குறை. இதனு டைய விலை 400 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்டி ருக்கிறது. விலை என்னமோ அதிகம் தான். வசந்தியைக் கேட்டால் உங்களுக்கு ஏதப்பா விலை என்று கூடச் சொல்லக் கூடும். அதெல் லாம் வெறும் கவிதை நடை மொழிகள் (சிரிப்பு) .

ஆனால் இந்த விலைக்கு இதை வாங்க எத்தனை பேர் முன்வருவார்கள் என்ப தையும் இந்த அளவுக்கு விலை போடலாமா என்ப தையும் வசந்தி எண்ணிப் பார்க்கவேண்டும். ஆனால் அவர் சொல்லக் கூடும். கொல்கொத்தாவிற்கு எத் தனை முறை போயிருக் கிறேன், திருக்குவளைக்கே போய் வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன், இதற்கெல்லாம் வழிச் செலவு என்று வைத்துக் கொண்டால்கூட, 400 ரூபாய் என்ன, 500 ரூபாய் கூட விலை போடலாமே என்று சொல்லக் கூடும். இருந்தாலும் விலை அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது, நானும் ஏற்க முடியாது. எனக்குத் தரப்பட்ட தலைப்பு ஏற்புரை (பலத்த சிரிப்பு). ஏற்புரை என்பது புத்தகத்திலே உள்ள வாசகங்களுக்குத் தானே தவிர, அட்டையிலே உள்ள விலைக்காக அல்ல. (சிரிப்பு) இதிலே கவனம் செலுத்த வேண்டும் என்னு டைய மகள் வசந்தி என்ற முறையில், அப்பாவின் கட் டளையாக இதை யேற்று எந்த அளவிற்கு விலையைக் குறைக்கலாம் என்பதை பதிப்பகத்தா ரோடு கலந்து பேசி அதற்குரிய அறிவிப் பை உடனடி யாக வெளி யிட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவேளை நாளைக்கே விலையைக் குறைவாகப் போட்டால், எதிர்க்கட்சிக் காரர்கள் சிலபேர் சொல்லக் கூடும். புத்தகம் விற்கவில் லை, ஆகவே விலையை குறைத்து விட்டார்கள் என்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் காது கொடுத்து நம்முடைய கடமைகளை மறந்து விடக் கூடியவர்கள் அல்லர். யார் என்ன பேசினாலும், என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், உரிய விலை, நியாயமான விலை என்ன என்பதை எண்ணிப் பார்த்து அந்த வகையிலே இந்தப் புத்தகத் திற்கு விலையை நிர்ணயிப் பதற்கு அவர் மறுபரிசீல னை செய்ய வேண்டு மென்று நான் கேட்டுக் கொள்கிறேன். மறு பரி சீலனையை அரசாங்கமே செய்யும்போது மறு பரிசீ லனையை நாம் செய்யாமல் இருக்கத் தேவையில்லை, ஆகவே மறுபரிசீலனை செய்ய வேண்டும். நம்மு டைய இயக்குநர் பாரதிரா ஜா அவர்கள் உடல் நலி வோடு இங்கே வந்தேன் என்றார். ஏற்புரையாற்ற வந்திருக் கின்ற நானும், நேற்றைய தினம் ராமச்சந்திரா மருத் துவமனையில் ஏறத்தாழ ஓர் மணி நேரத்திற்கு மே லாக ஒரு அறுவைச் சிகிச் சைக்கு எந்த ஆயத்தங்கள் உண்டோ, அவ்வளவு ஆயத்தங்களோடு நடை பெற்ற தோள் வலிக்கான ஊசி போடுகின்ற சிகிச்சை யைச் செய்து கொண்டுதான் பேராசிரியர் குறிப்பிட் டதைப் போல் ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு இங்கே வந்திருக்கிறேன். கூடவே மருத்துவர் வந்தி ருக்கிறார். ராமச்சந்திரா மருத்துவமனையிலே இருக்கின்ற பெரிய டாக்டர், திறமையான டாக்டர், மிகுந்த நல்ல உள்ளம் படைத்தவர் டாக்டர் மார்த்தாண்டம், அவர் தான் எனக்கு சிகிச்சை செய்தார், சென்ற ஆண்டும் அவர் தான் சிகிச்சை செய்தார். அவர் சொன்னார் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சென்று மூன்று மணிநேரம், நான்கு மணிநேரம் உட் கார்ந்திருக்கிறீர்களே, அதுவே உங்களுக்குப் பெரும் நலிவை விளை விக்கும் என்று சொன்னார்.

நான் சொன்னேன் நண் பர்கள் அழைக்கும்போது கழகத் தோழர்கள் விரும் பும்போது மேடையில் வீற்றிருப்பவர்களின் பேச் சை பாதியிலே நிறுத்தி விட்டு நான் இறங்கி விட முடியாது என்று சொன் னேன். இங்கேயுள்ள பேச்சாளர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. டாக் டர் சொன்னார் ஏதோ கவி யரங்கம் என்று போகிறீர் கள், உங்களுக்குத் தெரியாத கவிதைகளையா அவர்கள் பாடிவிடப் போகிறார்கள், அதை கேட்டுக் கொண்டு மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கிறீர்களே, முறையா? என்று கேட்டார்.

நான் அவரிடம் சொன் னேன். நான் தெரிந்து கொள்ள வேண்டிய கவிதை களையும் அவர்கள் பாடு கிறார்கள், நான் அதற்காகத் தான் போகிறேன், அவற்றை நான் மிகவும் ரசிக்கிறேன் என்று குறிப்பிட்டேன். ஆனால் கண்டிப்பாக இனி மேல் எந்த நிகழ்ச்சியா னாலும், போய்க் கலந்து கொண்டு, நீங்கள் ஆற்ற வேண்டிய உரையை ஆற்றி விட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பி விடுங்கள் என் றெல்லாம் வலியுறுத்தியிருக் கிறார்கள்.

தோள்வலி மிகுந்திருக்கிறது

அதற்காகவே ஒரு டாக் டர் என்னுடன் வந்திருக் கிறார். அவரிடமும் சொல்லிவிட்டு இன்று நான் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிறேன். இது ஒன்றும் பிரமாதமான நோயல்ல. தோள் வலி தான். தோள் வலிக்கு இரண்டு பொருள் உண்டு. தோளிலே வலிப்பது ஒன்று. தோள் வலி மிக்கவன் என்பது ஒன்று. தோள் வலி உடைய வன் என்றால், அவன் வீரன். அது போல எனக்கு தோள் வலி. (கைதட்டல்) இப்படி பொருள் கொள்ள வேண்டு மென்று என் எதிர் வரிசை நண்பர்களைக் கேட்டுக் கொண்டு யாரும் கவலைப் படாதீர்கள், தோள் வலி மிகுந்திருக்கிறது, தோள் வலி மிகுந்த காரணத்தால் தான் இவ்வளவு அல்லல் கள், ஆபத்துகள், சோதனை கள் அனைத்தையும் தாங்கு கின்ற அந்த வலிமை மருந் தாக நீங்கள் தருகின்ற அன் பாக எனக்குப் பயன்படு கின்றது. இந்த அன்பு என் கின்ற மருந்து இருக்கின்ற வரையில், இந்தப் பாசம் என்கின்ற மருந்து இருக் கின்ற வரையில், எந்த வலி யும் என்னை ஒன்றும் செய்ய முடியாது (கைதட்டல்).

அப்படியென்றால் இன் னும் ஒரு மணி நேரம் பேசு என்று சொல்லி விடாதீர்கள். ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு வசந்தி ஸ்டான்லி அப்பா வின் பேச்சை உடனே கேட்டு, 400 ரூபாய் விலை யை 300 ரூபாய் என்று நிர்ணயித்து வழங்க முன் வந்திருக்கிறார். அதிலேகூட அடக்க விலை என்று சொல்லியிருக்கிறார். பரவா யில்லை 300 ரூபாய்க்கு இந்தப் புத்தகம் விற்பனை யாவதில் எனக்கு மகிழ்ச்சி தான்.

இதிலே எழுதியுள்ள நண்பர்கள் என்னைப் பாராட்டியும், என்னிடத் திலே அன்பு கொண்டும் பாசம் கொண்டும் பழகிக் கொண்டிருப்பவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பேராசிரியர் க.அன்பழகன் நூலினை வெளியிட புதுவை முதல்வர் வைத்திலிங்கம் பெற்றுக் கொண்டார்.

கவிப்பேரரசு வைர முத்து, பீட்டர் அல் போன்ஸ், இயக்குநர்கள் பாரதிராஜா, பார்த்திபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்

No comments:

Post a Comment