ஒற்றையர் பிரிவு மோதலை தீர்மானிக்கும் குலுக்கலில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி கூறியதாவது: சென்னையில் 31 வருடங்களுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. கடைசியாக 1979ல் இந்தியா & ஆஸ்திரேலியா மோதிய போட்டி ஜிம்கானா கிளப்பில் நடந்தது. டேவிஸ் கோப்பை மீண்டும் சென்னையில் நடப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கடந்த காலங்களில் மரக்கட்டையால் ஆன கேலரி, தற்காலிமாக அமைக்கப்பட்ட களிமண் தரையில் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த ஸ்டேடியங்களில் பெரும்பாலான விளையாட்டுகள் நடக்கிறது. தமிழக அரசு ஆதரவோடு ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச போட்டி (சென்னை ஓபன்) நடத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் வீரர் சோம்தேவுக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 20 வருடங்களாக டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாடி வரும் லியாண்டர் பயசுக்கு எனது வாழ்த்துக்கள். இரு அணி வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய டென்னிஸ் சங்க செயலர் அனில் கண்ணா, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் ஏ.எல்.அழகப்பன், போட்டி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கார்த்தி சிதம்பரம், ஐடிஎப் உறுப்பினர் இஸ்மாயில் ஷபி, இந்தியா மற்றும் பிரேசில் அணி வீரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். வீரர்கள் விவரம்:
இந்தியா:
லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சோம்தேவ் தேவ்வர்மன், ரோஹன் போபண்ணா.
பிரேசில்:
தாமஸ் பெலுசி, ரிக்கார்டோ மெலோ, புரூனோ சாரஸ், மார்செலோ மெலோ.
ஒற்றையர் ரேங்கிங்கில் தாமஸ் 27, ரிக்கார்டோ 75, சோம்தேவ் 113வது இடத்தில் உள்ளனர். போபண்ணா தற்போது இரட்டையர் போட்டியில் மட்டும் விளையாடி வருவதால் தரவரிசையில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இரட்டையர் ரேங்கிங்கில் பயஸ் (8), பூபதி (13), புரூனோ (37), மார்செலோ 38வது இடத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment