கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 10, 2010

குழந்தைக்கு தாய் பாலூட்டுவது போல்; மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தமிழ் உணர்வை ஊட்ட வேண்டும் : பேரா. க.அன்பழகன் பேச்சு


நெல்லை மாவட்ட கல்வித்துறை சார்பில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா 05.09.2010 அன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் மு.ஜெயராமன் தலைமை தாங்கினார். விழாவில், தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முன் னாள் குடியரசுத் தலை வர் டாக்டர் ராதாகி ருஷ்ணன் உருவப் படத் தைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தி னார். பின்னர் அவர், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைப் பாராட்டி, கேடயம் பரிசு வழங்கினார்.

விழாவில், அமைச்சர் க.அன்பழகன் பேசிய தாவது: ஆசிரியர் பணி சிறப்பான பணி. முன் னாள் குடியரசுத் தலை வர் டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, ஆசிரியர் தின விழாவாக கொண்டா டப்படுகிறது. அவர், பிறந்த நாளில் ஆசிரி யர்களை ஊக்கு விக்க நல்லாசிரியர் விரு துகள் வழங்கப்படுகின் றன.

கலைஞர் முதல் அமைச்சராக இருந்த போதுதான் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெய ரில், நல்லாசிரியர் விருதை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 50 ஆண்டு களாக அவர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ் ணனை, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்று அழைப்பார்கள். இதைக் கேட்டால் அவர், தொடக்கப்பள்ளிக்கும், மேல்நிலைப்பள்ளிக்கும் தொடர்பு உள்ளவர் என்று நினைக்கக் கூடும். அப்படி அல்ல. ராதா கிருஷ்ணன் திருத்த ணியை அடுத்த `சர்வ பள்ளி` என்ற கிராமத்தில் பிறந்தார். பிறந்த ஊரை சேர்த்துதான், அவர் "சர்வபள்ளி ராதாகிருஷ் ணன்" என்று அழைக்கப் படுகிறார்.

சென்னையில் படித்து, தத்துவத்துறை யில் ஆராய்ச்சி செய்தார். உலகம் போற்றும் அள வுக்கு பல நூல்களை எழுதினார். பின்னர் இந் திய குடியரசுத் தலைவர் ஆனார்.

இதேபோல் 2ஆவது உலகத்தமிழ் மாநாட் டைத் தொடங்கி வைத்த வர், அப்போது குடிய ரசுத் தலைவராக இருந்த ஜாகீர் உசேன். அவரும் ஆசிரியர்தான். பேரறிஞர் அண்ணா ஓர் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி னார். நான் (பேராசிரியர் அன்பழகன்) 13 ஆண்டு கள் ஆசிரியராக பணி யாற்றி உள்ளேன்.

எதற்காக இதை சொல்கிறேன் என்றால், தனி மனிதன் முயற்சி செய்தால் எந்த அளவுக்கு உயர முடியும் என்பதற்கு இவை எடுத்துக்காட்டு கள். ஆசிரியர்கள் தகுதி களை வளர்த்துக் கொண் டால் உயர்ந்த நிலையை அடையலாம். உழைப் புக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும்.

இங்கு பேசியவர்கள் தி.மு.க. ஆட்சியில், ஆசிரி யர்களின் குறைகள் தீர்க் கப்பட்டு நல்லாட்சி நடந்து வருகிறது, என்ற னர். அதற்காக கலைஞ ருக்கு நன்றி தெரிவித் தனர். எதிர்காலத்தில் குழந் தைகள் கல்வி அறிவு பெற்று, சமுதாயத்தில் சிறந்த முறையில் செயல் பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர் களுக்கு, கலைஞர் பல திட்டங்களை செய்து வருகிறார். ஆசிரியர்கள் வளமுடன் இருந்தால் தான், நல்ல முறையில் பாடங்கள் நடத்த முடி யும் என்ற எண்ணத்தில் சலுகைகள் அறிவிக்கப் பட்டு உள்ளன.

விருதுநகர் மாவட் டம் தொடர்ந்து 25 ஆண்டுகள் கல்வியில் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது என்று ஆட் சியர் கூறினார். காமராஜர் பிறந்த மாவட்டமாக இருப்பதால் முதல் இடம் பிடித்து இருக்கும். அந்த பகுதியைச் சேர்ந்த நாடார் பெருமக்கள் கல்விப் பணியை, சமு தாயப் பணியாக எடுத் துக் கொண்ட காரணத் தால் விருதுநகர் மாவட் டம் கல்வியில் சிறந்து விளங்குகிறது.

நாடார் சமுதாயத் தைச் சேர்ந்த சவுந்தர பாண்டியன், வி.வி.ராம சாமி, தூத்துக்குடி தனபால் ஆகியோர் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டார்கள். நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் கள், அனைவருக்கும் கல்வி அளித்தனர். அத னால் அந்த மாவட்டம் கல்வியில் முதல் இடம் பெற்று உள்ளது. இன் னும் சொல்லப்போனால் தேசிய உணர்வுடன், சுய மரியாதையையும் வளர்த் தனர்.

படித்தவர்கள் நிறைந்து இருப்பது நெல்லை மாவட்டத்தில் தான். சுதந்திர போராட் டத்துக்கு வித்திட்ட மாவட்டம் ஆகும். ஒரு காலத்தில் நாங்கள் பேசும்போது, "நெல்லை சீமை" என்றுதான் அழைப்போம். அந்த அளவுக்கு புகழ் பெற்ற மாவட்டம்.

ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வ.உ.சிதம் பரனார், நாவலர் சோம சுந்தரபாரதி, சி.கே.சுப்பிர மணியன், கா.சு.பிள்ளை, இரா.பி.சேதுப்பிள்ளை, சிதம்பரநாதன், உ.வே. சாமிநாத அய்யர், எழுத் தாளர் புலமைப்பித்தன், போன்றவர்கள் பிறந்த தும் இந்த மாவட்டத் தில்தான். இன்னும் கொஞ்சம் பின்னால் போய் பார்த்தால், வீர பாண்டிய கட்டபொம் மனை சொல்லலாம். தென் மாவட்டங்களில் கல்வியை வளர்த்த பெருமை கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கு உண்டு. ஜி.யு.போப், கால்டுவெல் போன்ற வர்கள் வெளிநாட்டு அறிஞர்கள். அவர்கள் தமிழ் மொழியை ஆய்வு செய்து, தேவாரம், திருவா சகம் போன்ற நூல்களை மொழி பெயர்த்தனர்.

தமிழ் உணர்வையும், தத்துவத்தையும், தேசிய உணர்வையும் மாண வர்களிடம் ஆசிரியர்கள் தான் ஏற்படுத்த வேண் டும். குழந்தைக்கு தாய் பாலூட்டுவது போல், பாட்டி பேத்திக்கு சோறு ஊட்டுவது போல், ஆசி ரியர்கள் மாணவர்க ளுக்கு தமிழ் உணர்வை ஊட்ட வேண்டும்.

நான் 7 ஆண்டு காலம் கல்வி அமைச்சராக இருந்தவன். விளையாட் டாக கல்வி கற்று கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். கதை சொல்லி, குழந்தை களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால், நாம் சொல் லிக் கொடுக்கின்ற கல்வி அவர்களின் மனதில் நிற்கும்.

நான் அமைச்சராக இருந்தபோது ரூ.2,400 கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. தற் போது ரூ.10 ஆயிரம் கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு கல்வி வளர்ச்சிக்கு முதல் இடம் கொடுக்கிறது. 2வது கட்டமாக சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறைகளுக்கு நிதி ஒதுக் கப்படுகிறது.

கல்வி வளர்ச்சி பெற் றால்தான் அறியாமை நீங்கும். சமத்துவம் ஏற்ப டும். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாச நிலை மாறும். சமுதாயத்தில் அனைவருக்கும் அடிப் படை உரிமைகள் கிடைக்கும். சமத்துவம் என்ற சுதந்திரம் கிடைக் கும். இதை கவனத்தில் கொண்டு, கல்வித் துறைக்கு அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆசிரியர் பணியைப் போன்று மகிழ்ச்சியான பணி, வேறு எதுவும் கிடையாது. உங்கள் பணியில் நீங்கள் பேரும், புகழும் பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் க.அன்பழகன் பேசினார்.

No comments:

Post a Comment