கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, September 12, 2010

தென்னை விவசாயிகள் நல வாரிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம் - முதல்வர் அறிவிப்பு


தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலவாரியத்தை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். வாரிய தலைவராக முன்னாள் எம்எல்ஏ என்.ராஜ்குமார் மன்றாடியார், துணைத் தலைவராக டி.ஏ. கிருஷ்ணசாமி கவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர டி.கே. சுப்பிரமணியம், (முன்னாள் எம்.எல்.ஏ.), இரா.கலைச்செல்வன் (காசங் காடு, பட்டுக் கோட்டை), வி.கே. சின்னச்சாமி (முன் னாள் எம்.எல்.ஏ.), மு.ஏ. கந்த சாமி கவுண்டர் (சுல் தான்பேட்டை, சூலூர்), ராசு என்கிற கந்தசாமி (தாராபுரம், திருப்பூர்), அ. தமிழ்த் தென்றல் (சேலம் மாவட்டம் ஜலகண்டா புரம்), மகுடபதி (ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர்), எம். குமரேசன் (பட்டி வீரன்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்), ஆர். நாக ராஜன் (பட்டுக் கோட்டை வட்டம், தஞ்சை மாவட் டம்), எஸ். சன்னாசி (சின் னமனூர், தேனி மாவட் டம்), ஆர். வெங்கடாச் சலம் (ஆத் தூர், சேலம் மாவட்டம்), பி.என். வேலுச்சாமி (ஒடக்கல் பாளையம், சூலூர்), சா. இராஜ சேகரன் (பெத் தாம்பா ளையம், திருப் பூர்), ஏ.சி. விசுவநாதன் (ஆம்பூர், வேலூர் மாவட் டம்), பேராசிரியர் ஹென்றி லூயிஸ் (நாகர்கோவில், கன்னியாகுமரி) ஆகி யோர் உறுப்பினர்களாக இருப்பர்.

அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர், நிதித்துறை முதன்மை செயலாளர், உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர், வேளாண் துறை ஆணையர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை ஆணையர், கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர், தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர், தென்னை வளர்ச்சி வாரிய மண்டல இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய தனி அலுவலர் ஆகியோரும் உறுப்பினர், செயலராக தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநரும் இருப்பர்.

No comments:

Post a Comment