தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவினர் 3 பேருக்கும், வரும் 8ம் தேதி து£க்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்ற சேலம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய சிறைக்கு இது தொ டர்பான வாரன்ட் நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி சிறை தண்டனை விதிக் கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சுற்றுலா வந்த பஸ்சுக்கு, தர்மபுரி இலக்கியம்பட்டி அருகே ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் பஸ்சிலேயே உடல் கருகி இறந்தனர்.
இது தொடர்பாக அதிமுகவை சேர்ந்த நெடு (எ) நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சேலம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த மாதம் 30ம் தேதி உச்சநீதிமன்றமும் 3 பேருக்கான தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், மற்ற 25 பேரையும் விடுவித்தது.
தண்டனையை நிறைவேற்ற வேண்டுமானால், அதற்கான தீர்ப்பு நகல், வழக்கு முதலில் நடந்த சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். தீர்ப்பு நகல் வந்தவுடன், து£க்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக வாரன்டை நீதிபதி பிறப்பிப்பார். அதன்படி, உச்சநீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு நகல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் நீதிமன்றத்துக்கு வந்தது.
குற்றவாளிகள் 3 பேரும் வேலு£ர் மத்திய சிறையில் இருப்பதால், து£க்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான வாரன்டை வேலு£ர் சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி ராகவன் நேற்று அனுப்பினார். அதில், “வரும் 8&10&2010ம் தேதி அதிகாலை 6 மணிக்கு 3 பேரையும் சாகும் வரை து£க்கில் போட வேண்டும்” என அந்த வாரன்டில் நீதிபதி கூறியுள்ளார். வாரன்டை நீதிமன்ற ஊழியர், வேலு£ர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றுள்ளார்.
No comments:
Post a Comment