கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, September 20, 2010

ஊழலின் ஊற்றுக்கண் என்பதா? - கம்யூனிஸ்டுகளுக்கு கருணாநிதி கேள்வி


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை :
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ”ஜனசக்தி” யில், கடந்த 18ம் தேதி அக்கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், “குடிசைகள் இல்லாத தமிழகம் மலரட்டும்” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த கட்டுரையின் முதல் பகுதியில் “குடிசைகள் இல்லாத தமிழகத்தை அமைப்போம் என அறிவித்தவுடன் அறிவிப்பை கொள்கை ரீதியில் வரவேற்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும், தொடர்ந்து இன்றைய தோழமை நினைவு வந்துவிட்டது போலும். உடனே, தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் குடிசைகள் எத்தனை? எப்பொழுது கணக்கு எடுத்தீர்கள்? ஏதோ ஒரு மதிப்பீட்டின்படி 21 லட்சம் குடிசைகள் என்று சொல்வதா? இதற்கான ஆய்வு, கணக்கெடுப்பு நடத்தப்பட்டதா? உத்தேசக் கணக்கா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கின்றார்.
கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், நமது மாநிலத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் இத்தகைய வீடுகளின் எண்ணிக்கை சுமார் 21 லட்சம் என அறியப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் நிதி உதவியுடன் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் மட்டும் இக்குடிசைகளை நமது மாநில அளவில் நிரந்தர இல்லங்களாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்.
இந்த நிலையை நெஞ்சில் நிறுத்தி, முதல் கட்டமாக, ஊரகப் பகுதிகளில் 21 லட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த வீடுகள் அனைத்தையும் காங்கிரீட் கூரை கொண்ட நிரந்தர இல்லங்களாக தமிழக அரசின் நிதியைக் கொண்டே மாற்றி அமைத்து, அவற்றை இலவசமாக அளிக்கும் திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது.
2010&2011ஆம் ஆண்டு தொடங்கி, இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டு காலத்தில் மண் சுவர்களால் ஆன 21 லட்சம் கூரை வீடுகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகள் இந்த அரசினால் கட்டித்தரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு, அது அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.
கடந்த மார்ச் 3ம் தேதி திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து தொடக்க விழா நடைபெற்றபோது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் சட்டமன்றத் தலைவர் செல்வி பாலபாரதி ஆகியோரும் கலந்து கொண்டனர். இத்திட்டத்தை வரவேற்றுப் பாராட்டியதோடு, இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ள வீடு ஒன்றுக்கு ஸீ60 ஆயிரம் என்பது போதாது, அதனை சற்று உயர்த்திட வேண்டுமென்று வலியுறுத்திப் பேசினார்கள்.
அவர்களுடைய அந்தக் கருத்துக்களைக் கூட அலட்சியப்படுத்தாமல் வீடு ஒன்றுக்கு ஸீ60 ஆயிரம் என்பதை ஸீ75 ஆயிரம் என்று உயர்த்தி அறிவித்தேன் என்பதை அனைவரும் அறிவார்கள். இவ்வளவிற்கும் பிறகு நேற்றையதினம் தா.பாண்டியன், தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் குடிசைகள் எத்தனை, எப்போது கணக்கெடுத்தீர்கள் என்றெல்லாம் கேட்பது சரிதானா?
உள்ளபடியே இந்தத் திட்டத்தை வரவேற்கும் செயல்தானா என்பதை அந்தக் குடிசை வீடுகளில் குடியிருக்கின்றவர்களுக்காக குரல் எழுப்பும் கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பர்கள் ஒரு சிலராவது எண்ணிப்பார்க்க வேண்டும்.
வீடு ஒன்றுக்கு மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டுமாம். வீட்டின் அளவை அதிகப்படுத்த வேண்டுமாம். மலிவான பரிந்துரைகளை வாரி இறைக்கிறார்கள். தற்போது அரசு அறிவித்துள்ள வீடு ஒன்றுக்கு
ஸீ75 ஆயிரம் என்பதற்கே ஆண்டு ஒன்றுக்கு ஸீ2250 கோடி செலவாகும். இதை மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தினால் ஆண்டு ஒன்றுக்கு ஸீ9000 கோடி தேவைப்படும். உண்மையில், இந்தத் திட்டம் நிறைவேறி திமுக அரசுக்கு நல்ல பெயர் வந்து விடக் கூடாது என்பதுதான். அதனால்தான் வேண்டுமென்றே இப்படிப்பட்ட பரிந்துரைகளை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாண்டியனார் கூறுகிறார் என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள்.
தா.பாண்டியனை விட ஒரு படி மேலே சென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்து, தி.மு.கவோடு தோழமை பூண்டு, என்னை அடிக்கடிச் சந்தித்து உரையாடிய என்.வரதராசன், “தமிழகத்தில் தி.மு.க. அரசு, ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது” என்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசி, அவர்களின் நாளிதழில் வெளி வந்துள்ளது.
இதே வரதராஜன்தான் தலைமைச் செயலகத்திலே என்னைச் சந்தித்து சிறுதாவூரில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஜெயலலிதாவும், அவருடைய நண்பர்களும் ஆக்கிரமித்துக் கொண்டதாக எழுத்து மூலமாக புகார் மனு கொடுத்தார். அதுகுறித்து நான் உடனடியாக நீதிபதி சிவசுப்ரமணியத்தை கொண்டு விசாரிக்கச் செய்தேன். அவரும், தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் அபகரிக்கப்பட்டது உண்மைதான் என்று அறிக்கை கொடுத்த பிறகு, அந்த விசாரணைக்கு ஏற்பாடு செய்த திமுக அரசு, ஊழலின் ஊற்றுக் கண்ணாம். அந்த அபகரிப்புக்குக் காரணமான ஜெயலலிதா உண்மையின் உறைவிடமாம்.
2006ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி, என். வரதராசன் கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்த மனுவில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தங்கி யிருந்த சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள இடம் அவரது தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் பதிவு மற்றும் பட்டா உள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன” என்று எழுதிக் கொடுத்தார்களே, அந்த ஜெயலலிதா தற்போது கம்யூனிஸ்ட்களுக்கு புனிதவதியாகத் தெரிகிறார். தி.மு.க அரசு ஊழலின் ஊற்றுக் கண்ணாக மாறிவிட்டதா?
2008 நவம்பர் 14ம் தேதி பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நன்மாறன் பேசுகையில், “கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியோடு பட்டா வழங்குதல் நிறை வடைந்து விட்டது என்று குறிப்பிட்டாலுங்கூட எங்களுடைய தலைவர் என். வரதராசன் வேண்டுகோளின் அடிப்படையில் மீண்டும் ஓர் ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டது இப்போதும் அவை நடவடிக்கைக் குறிப்பிலே உள்ளதே.
தமிழக அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் ஆளுநர் உரை விவாதமாக இருந்தாலும் சரி, நிதிநிலை அறிக்கை மீதான விவாதமாக இருந்தாலும் சரி, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும் வரவேற்று, பாராட்டிக் கொண்டு தானே இருந்தார்கள். திடீரென்று தி.மு.க அரசு எப்படி ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறி விட்டது?
நாங்கள் என்ன ஊழல் செய்து விட்டோம்? தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை விலை கொடுத்து வாங்கி விட்டோமா, அல்லது அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை குறைந்த விலைக்கு யாராவது வாங்கி விட்டோமா? அரசு ஊழியர்களுக்கு எதிராக ஏதாவது எஸ்மா, டெஸ்மா சட்டங்களைப் பிறப்பித்து விட்டோமா? அரசு அலுவலர்கள் பாராட்டுகிறார்கள். அனைத்துத் தரப்பினரும் அரசின் செயல்பாடுகளை வரவேற்கிறார்கள். இந்த நிலையில் கம்யூ னிஸ்ட்கள் இந்த அரசை எதிர்க்கக் காரணம் என்ன?
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ரேஷன் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆனால், மேற்கு வங்கத்தில், ரேஷன் கடைகளை தனியார் வசம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து சுப்ரீம் கோர்ட், உணவுத் துறை கமிஷன் அங்கு விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்றையதினம் நாளேட்டில் வந்துள்ள செய்தியினைத்தான் எழுதியிருக்கிறேன். இதைக் கூட எழுத நேரிட்டதற்கு காரணம், மதுரை கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ் ணன், “அடக்குமுறை கொண்டு எந்த இயக்கத்தையும் தமிழக அரசால் ஒடுக்கி விட முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு தலைமை ஏற்பது மேற்கு வங்க அரசே” என்று கூறி அவர்களின் ஏட்டில் அந்தப் பேச்சு வந்துள்ளது. அதனால் தான் மேற்கு வங்க அரசின் நிலையை குறிப்பிட வேண்டியதாயிற்று. இரு கம்யூனிஸ்டுகளும் இனியாவது, “நிந்தனை” விடுத்துச் “சிந்தனை” செய்வார்களாக.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment