கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, September 28, 2010

கையிருப்பு குறைவாக உள்ளதால் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி கூடாது - பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம்


இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்க்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அடுத்த பருத்தி சீசன் தொடங்குமுன் பருத்தி ஏற்றுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்து, தங்களுக்கு கடந்த 19.5.2010 அன்று கடிதம் எழுதினேன். மேலும், பருத்தி சீசன் தொடங்கப்பட்ட பிறகு பருத்தி விளைச்சல், உள்ளூர் தேவை, உபரியாக இருக்கும் பருத்தி ஆகியவற்றை மதிப்பீடு செய்த பிறகு, பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கலாம் என்றும் அந்த கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
பருத்தி ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டதன் காரணமாக, கடந்த மூன்று வாரங்களாக பருத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, பருத்தி விலையில் ஏற்படும் மாற்றங்களை தடுக்க சரியான நடவடிக்கை தேவை. ஜவுளி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் நாட்டிலேயே முதன்மையாக திகழ்கிறது. ஜவுளித்துறையின் மூலம் ஏற்றுமதி செய்வது ஒரு பகுதியாக இருந்தாலும், நாடு முழுதுவதும் லட்சகணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாகவும் இது இருக்கிறது. இந்த தொழிலில் ஈடுப்பட்டு இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தினக்கூலி கைத்தறி நெசவாளர்கள் தான். பருத்தி விலை உயர்வினால் நூல் விலையும் கணிசமாக உயரக்கூடும். இதன் காரணமாக கைத்தறி துறை பெரும் இன்னலுக்கு உள்ளாகும்.
எனவே, பருத்தி ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதற்கு முன்பு உள்ளூரில் பருத்தி தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்துவது மிக முக்கிய மானதாகும். மேலும், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகள் சர்வதேச ஜவுளி சந்தையில் இந்தியாவுடன் போட்டியிடுகின்றன. உள்ளூர் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையில் பருத்தி கிடைப்பதை உறுதிப்படுத்தினால்தான் சர்வதேச சந்தையில் போட்டியிட இயலும். துணி விலையை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்.
உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப பருத்தி சந்தைக்கு வரும் வரையில் நிலைமையை உறுதி செய்ய வேண்டும். அதுவரை பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதிக்க கூடாது என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment