கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, September 1, 2010

திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான பி.எஸ்.மணியம் சிகிச்சைக்கு முதல்வர் உதவி - அமைச்சர் அழகிரி நலம் விசாரிப்பு


உடல்நலம் பாதிக்கப்பட்டு பணவசதி இல்லாமல் கஷ்டப்பட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான பி.எஸ்.மணியம் முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான பி.எஸ். மணியம் (73). திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக உள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன் வீட்டில் படுக்கையிலிருந்து தவறி விழுந்ததில் இவரது இடுப்பு எலும்பு முறிந்தது.
இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை இருந்தது. மேலும் பண வசதி இல்லாத நிலையில், தனது சிகிச்சைக்கு உதவி செய்யும்படி முதல்வருக்கு பி.எஸ்.மணியம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை இருந்தது. மேலும் பண வசதி இல்லாத நிலையில், தனது சிகிச்சைக்கு உதவி செய்யும்படி முதல்வருக்கு பி.எஸ்.மணியம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து முதல்வர் உத்தரவின் பேரில் நேற்று காலை பி.எஸ். மணியம் அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மதுரை வடமலையான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வடமலையான் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் உடன் சென்றனர்.

No comments:

Post a Comment