கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 10, 2010

தமிழர் நலனுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள நிருபமாராவிடம் வலியுறுத்தினேன்: கலைஞர்


திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு விவரம் அரசிதழில் வெளியிடப்படுமா?
காவிரி பிரச்னையை தீர்க்க சட்டரீதியான அணுகுமுறையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தமிழக, கர்நாடக அரசுகள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தி வரும் பேச்சுவார்த்தையாலும், மழை யாத்திரையாலும் கூடுமானவரை நமக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.
காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி இதுவரை நமக்கு கர்நாடகம் தண்ணீர் கொடுத்துள்ளதா? கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா?
தேவையான தண்ணீரை கர்நாடக அரசு தரும் என்ற நம்பிக்கை உள்ளது. தவறினால் அதை தருமாறு செய்ய மத்திய அரசை வற்புறுத்துவோம்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தஞ்சை வந்தபோது, அணையில் தண்ணீர் இருந்தால்தான் தண்ணீர் தருவோம் என்று கூறியுள்ளாரே?
வறண்டுபோய் இருந்தால் அவர்களால் எப்படி தர முடியும். மேலும் காவிரி நீர் பிரச்னை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதை விரைவுபடுத்த வேண்டும் என்று நாம் உத்தரவிட முடியாது.
புல்லட் ரயில் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் போன்று மத்திய ரயில்வே துறைக்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளின் தற்போதைய நிலை என்ன?
மெட்ரோ ரயில் திட்டம் தற்போது நடந்து வருகிறது. குறித்த நேரத்தில் முடிக்கப்படும்.
வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், இலங்கை சென்று வந்தது தொடர்பாக உங்களிடம் ஏதாவது கூறினாரா?
அவர் இலங்கைக்கு போகும்போது வந்து பார்த்துவிட்டு சென்றார். தமிழர் நலனுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அவரிடம் வலியுறுத்தினேன்.ஆனால், வந்த பிறகு அதுபற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை.
அரசு செயல்பாடுகளில் குறுக்கிடுவது போல் நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கக் கூடாது என பிரதமர் கருத்து தெரிவித்துள்ளாரே?
அரசின் செயல்பாடுகளுக்கு என்று ஒரு எல்லை உண்டு. அது பற்றிதான் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளாரே தவிர, அவர் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தாக எடுத்துக்கொள்ள கூடாது.
திமுகவின் மாநில சுயாட்சி பற்றிய முழக்கம் தற்போது குறைந்து விட்டது போல் தோன்றுகிறதே?
திருச்சியில் கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற திமுக கூட்டத்தில்தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது உள்பட 5 முழக்கங்களை அண்ணா வெளியிட்டார். இதனை வலியுறுத்தி, முரசொலி மாறனும் ஒரு தொடர் கட்டுரை எழுதி புத்தகமாகவே வெளியிட்டார். சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூட 1970ம் ஆண்டு சென்னையில் மாநில சுயாட்சியை வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்தில் என்னுடன் அவர் கலந்து கொண்டதை நினைவு கூறியிருக்கிறார்.
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதே?
செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களில் அதுவும் ஒன்று. தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் குறித்து கோவிந்தராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஆங்காங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?
கோவிந்தராஜன் குழுவினர் மேலும் கால நீட்டிப்பு கேட்டுள்ளனர். குறிப்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை எடுத்துச்சொல்வதற்காக இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக நதிகள் இணைக்கப்படும் திட்டம் எந்த நிலையில் உள்ளது?
முதல்கட்டமாக தாமிரபரணி உள்ளிட்ட நதிகளை இணைப்பது குறித்து பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் நேற்று பந்த் நடத்தியதே?
தமிழகத்தில் விலைவாசி உயர்வின் தாக்கம் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது வாங்கி புசிக்கும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களது சுமையை பெருமளவில் குறைக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறோம்.
பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்குமா?
ஏற்கனவே 2 முறை குறைத்தாகி விட்டது. இனி குறைக்க முடியாது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து பிரதமரிடம் புகார் தெரிவித்துள்ளார்களே?
2001ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது என்ன பாதுகாப்பு அளிக்கப்பட்டதோ, அதே பாதுகாப்பு இன்றும் தொடர்கிறது. இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடுவதில்லை என்பதற்காக அரசு சார்பில் விளம்பரமாகவே கொடுத்திருக்கிறோம்.
திமுக & காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளதா?
திமுக& காங். கூட்டணி பலமாக உள்ளது. வேறு கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து காங்கிரசுடன் பேசி முடிவு செய்யப்படும்.
மக்கள் விரும்பும் கூட்டணி என்று ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கூறுகிறார்களே, மக்கள் விரும்பும் கூட்டணி என்றால் என்ன?
பத்திரிகையாளர்கள் விரும்பும் கூட்டணிதான் மக்கள் விரும்பும் கூட்டணி(பலத்த சிரிப்பு)
2011 தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

பெரம்பலூரில் அமையவுள்ள சிறப்பு பொருளாதார மையப் பணிகள் எந்த நிலையில் உள்ளது?

நேர்த்தியான முறையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப் போவதாகச் சொல்லியிருக் கிறார். தி.மு.க. அமைச்சர்களில் மாற்றம் இருக்குமா?

அதைப்பற்றி பிரதமர் என்னிடம் எதுவும் கலந்து பேசவில்லை.


சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாட்டில் உங்களுக்கு திருப்தி இருக்கிறதா?


இருக்கிறது.


உங்கள் தலைமையில் தான் பிரதமர்,சோனியா போன்றவர்கள் கலந்து கொண்டு சேது சமுத்திரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் தற்போது அது முடக்கப்பட்ட நிலையில் உள்ளதே?


அதுவும் உச்ச நீதி மன்றத்திலே தான் உள்ளது. அதனால் அது முடக்கப்பட்டுள்ளதாகச் சொல்ல முடியாது.

தி.மு. கழகத்திற்கும், காங்கிரசுக்கும் இடையே உள்ள கூட்டணி உறுதியாகவும் நம்பிக்கையாகவும் இருப்பதை நாட்டு மக்களே அறிகிறார்கள். ஆனால் எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா அவருடைய தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்ற வகையில் - நம்பிக்கையோடு இருங்கள், நல்ல கூட்டணி அமையப் போகிறது என்று காங்கிரசோடு உறவு வருவதைப் போல சமிக்ஞை கொடுத்து வருகிறாரே?

எந்தக் கட்சித் தலைவராவது தன் கட்சியின் தொண்டர்களைப் பார்த்து நம்பிக்கை இல்லாமல் இருங்கள் என்று சொல்வார்களா? சொல்ல முடியுமா?

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மாதந்தோறும் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் போதும் என்று சொன்னபோதும், ஆட்சியின் முடிவில் 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான வழக்கு, பதினைந்து ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சட்டம் அனைவருக்கும் சமமானது என்று முழங்கும் ஜெயலலிதா – தனக்கு மட்டும் விதிவிலக்கு கேட்பதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?


அதைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? மக்களே நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அரசு அலுவலர்களுக்கு தமிழகத்திலே தான் ஊதிய உயர்வுகளும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஒரு சிலர் துhண்டுதல் காரணமாக சில அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபடு கிறார்களே?

அதைப் பற்றி அந்தத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களில் பெரும்பாலோர் உணர்ந்து, அதற்கேற்ப அவர்கள் செயல்படுகிறார்கள். அதைப் பற்றி எனக்குக் கடிதமும் எழுதுகிறார்கள்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.

No comments:

Post a Comment