தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
நெல்லை மாவட்டம், புளியங்குடியை சேர்ந்த எம்.சுபஹானி மனைவி ஜமீலா பீவி, பிரசவத்துக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஜமீலா பீவியின் கணவர் எம்.சுபஹானி, ஓட்டலில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். எனவே, அவருடைய குடும்பத்தின் வறுமை நிலையை கருதி, அவருடைய மூன்று வயது மகன் ரியாஸ்கானுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஸீ2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொகையை சிறுவன் ரியாஸ்கான் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் பெயரில் கூட்டாக நிரந்தர வைப்பீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை சிறுவனின் பராமரிப்புக்காக செலவிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். மேலும், கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment