About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Thursday, September 30, 2010
அயோத்தி வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பு: சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாக பிரிக்கப்படும்
அயோத்தி 60 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இந்த வழக்கில் 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். மேலும் அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பில் நிலம் இருக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம், சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு சொந்தமா அல்லது அகில பாரதிய இந்து மகா சபைக்கு சொந்தமா என்பது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது. இது யாருக்கு சாதகமாக இருந்தாலும், கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகளின் தீர்ப்பு! அயோத்தி நில விவகாரத்தில் நீதிபதிகள் 3 பேரும் தனித்தனியே தீர்ப்பு வழங்கினர். நிலத்தை பிரித்து இரு தரப்புக்கும் வழங்க 2 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். நிலத்தில் கோவில் கட்ட அனுமதிக்க 1 நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனையடுத்து 3 மாதங்களுக்கு நிலம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும்- என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு உரிமை கோரிய சன்னி மத்திய வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பாபர் மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்ட ராமர் கோவில் கமிட்டிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், மீதமுள்ள இடத்தை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யலாம் மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். மூன்றில் மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி இந்து மகா சபைக்கு தரப்பட வேண்டும். தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளுக்கு பலத்த பாதுகாப்பு: தீர்ப்பு அளித்த 3 நீதிபதிகள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிபதிகள் டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தான் இன்று அயோத்தி தீர்ப்பை அளித்தது. நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், செய்தி சேகரிக்க குவியும் பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையின் உள் பகுதியிலும், வெளிப் பகுதியிலும் கூடுதலாக மத்தியப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அயோத்தி தீர்ப்பை வழங்கும் நீதிபதி டி.வி.சர்மா இன்றுடன் ஓய்வு: அயோத்தி நில விவகார வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையி்ன் 3 நீதிபதிகள்(டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான்) அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. நீதிபதி டி.வி.சர்மா பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில் நீதிபதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment