தி.மு.க. அரசு சாதனைகளால் மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. அணி வெற்றி பெறும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு அச்சம்பத்து, துவரிமான் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களில் அவர் 14.09.2010 அன்று சுற்றுப் பயணம் செய்து மக்கள் குறை கேட்டார். அங்கு பெண்கள் உள்பட கிராம மக்கள் திரண்டு வரவேற்று மனுக் கள் அளித்தனர். இதன் பிறகு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:&
மக்கள் குறை கேட்கும் இந்த சுற்றுப் பயணம் திருப்திகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்தது. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலின் போது இந்த பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட் டுள்ளன. அமைச்சராகி இப்போது மக்களை சந்திக்கும்போது மேலும் கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு பிரித்து கொடுத்துள் ளேன். சட்டப்பூர்வமாக நிறைவேற்றக்கூடிய அனைத் தும் நிறைவேற்றி கொடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். பொதுவாக குடிநீர், கூடுதல் பஸ்வசதி, முதியோர் பென் சன், கழிப்பிடம், பெண்களுக்கு குளியல் அறை, சமுதாய கூடம், சுடுகாட்டு பாதை போன்ற கோரிக்கை களை தெரிவித்துள்ளனர். அது நிச்சயம் நிறைவேற்றப்படும். மக்கள் குறை கேட்கும் எனது இந்த சுற்றுப்பயணம் மதுரை நகர் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் தொடரும்.
மதுரை மாவட்டத்தில் டன்லப் டயர் தொழிற்சாலை அமைப்பது குறித்து தொழில் அதிபர்கள் என்னுடன் பேசி வருகிறார்கள். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. ஒன்றரை கோடி அளிக்கப்படுகிறது. எம்பி. தொகுதி நிதி ரூ. 2 கோடி என்பதை ரூ. 9 கோடியாக உயர்த்த பிரதமர், மத்திய நிதி அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம்.
மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று விஜயகாந்த் கூறி உள்ளாரே?
தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் முதல்வர் கரு ணாநிதி எண்ணற்ற திட்டங் களை நிறைவேற்றி உள்ளார். தொடர்ந்து நிறைவேற்றுவதை மக்கள் அறிவார்கள். எனவே விஜய்காந்த் கூறுவதை மக் கள் பார்த்துக் கொள்வார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு..க. அணி 200 இடங்களை பிடிக்கும் என்று முன்பு கூறினீர்கள். அந்த நிலை நீடிக்கிறதா?
தி.மு.க. அரசு திட்டங் கள் முதல்வர் கருணாநிதி சாதனைகளால் மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
ஜெயலலிதா மதுரையில் முதலில் ஆர்ப்பாட்டம் அறிவித்த போது, வெடி குண்டு மிரட் டல் கடிதம் வந்ததாக புகார் கூறினாரே?
இதற்கு ஏற்கனவே பதில் சொல்லி இருக்கிறேன்.
இவ்வாறு பதிலளித்தார்.
No comments:
Post a Comment