மதுரை விமான நிலையத்தில் ரூ.128 கோடியில் கட்டப்பட்ட புதிய டெர்மினலை செப்.12ல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைக்கிறார். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, பிரபுல் பட்டேல் பங்கேற்கின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் ரூ.128 கோடியில் புதிய டெர்மினல் அமைக்கப்பட்டுள்ளது. 17 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பில் 2 மாடியாக அதிநவீன முறையில் சர்வதேச தரத்துடன் இந்த டெர்மினல் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் விசேஷ தகட்டில் மேற்கூரை முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இமிகிரேசன் வசதி முதல்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 500 பயணிகள் கையாளும் வசதியுடன் சர்வதேச விமானங்கள் வந்து செல்ல தேவையான அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. டெர்மினல் கட்டிடத்திலிருந்து நேரடியாக விமானத்திற்குள் செல்லும் வகையில் ஏரோபிரிஜ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய டெர்மினல் கட்டிடத்தின் திறப்பு விழா செப்.12ல் மாலை 3.45 மணிக்கு மதுரை விமான நிலைய வளாகத்தில் நடக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் புதிய டெர்மினலை திறந்து வைக்கிறார். மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முன்னிலை வகிக்கிறார். மத்திய சிவில் விமானத்துறை இணை அமைச்சர் பிரபுல் பட்டேல் தலைமை வகிக்கிறார். தமிழக அமைச்சர்கள் கேஎன். நேரு, தமிழரசி, இந்திய விமான நிலையங்கள் அணைய குழும தலைவர் அகர்வால் மற்றும் எம்பி, எம்எல்ஏ.க்கள் பலர் பங்கேற்கின் றனர்.
No comments:
Post a Comment