முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி சென்னையில் நடந்தது.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் முரசொலி அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிக ளுக்கு பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிப் போட்டிகள் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் பத்மபிரியா (பெரம்பலூர்) முதல் பரிசு ஸீ15 ஆயிரம், அஞ்சலி (திருவண்ணாமலை) 2ம் பரிசு ஸீ10 ஆயிரம், கெவின் விமலாமேரி (தூத்துக்குடி) 3ம் பரிசு ஸீ5 ஆயிரம் பெற்றனர். மேலும் ஆறுதல் பரிசு தலா ஸீ3 ஆயிரம் ராம.கபிலா, ஆதிலிங்கம் (மதுரை) ஆகியோர் பரிசு பெற்றனர்.
கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டியில் விஜயலட்சுமி (கடலூர்) முதல் பரிசு ஸீ15 ஆயிரம், ந.கலைவாணி (தஞ்சாவூர்) 2ம் பரிசு ஸீ10 ஆயிரம், பாலாஜி (ஈரோடு) 3ம் பரிசு ஸீ5 ஆயிரம், ஆறுதல் பரிசு தலா ஸீ3 ஆயிரம் சர்மிளாதேவி (சிவகங்கை) ரெசினா (தென்சென்னை) ஆகியோர் பெற்றனர். இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நாகர்கோவிலில் வரும் 20ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதி பரிசுத் தொகை, சான்றிதழ்களை வழங்குகிறார்.
இறுதிப் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கும், மாவட்ட முதல் மற்றும் 2ம் பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுத் தொகை, சான்றிதழ்களை முரசொலி தலைமை நிர்வாகி உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பங்கேற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட முதல் மற்றும் 2ம் பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
முன்னதாக முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் எஸ்.ஏ.எம்.உசேன் வரவேற்றார்.
இலக்கிய அணி செயலாளர் தஞ்சை கூத்தரசன் போட்டிகளை நடத்தினார்.
No comments:
Post a Comment