முதல்வர் கருணாநிதி இன்று சென்னை கதீட்ரல் சாலையில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்தரத்தில் அமையவிருக்கும் தாவரவியல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை காலை 10-30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்தினார்.
உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி, வேளாண்மைத்துறை செயலர் ராம்மோகன் ராவ், சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா, தோட்டக்கலைத்துறை இயக்குநர் சந்திரமோகன் ஆகியோர் உடனிருந்தனர். இந்தப் பூங்கா வரும் அக்டோபர் திங்களில் பொது மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது. முதல்வர் கருணாநிதி உலகத் தரம் வாய்ந்த இந்தத் தாவரவியல் பூங்காவிற்கு “செம்மொழிப் பூங்கா” என்று பெயரிட்டுள்ளார். கோவை மாநகரில் 2010 ஜூன் திங்களில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை யொட்டி முதல்வர் அடிக்கல் நாட்டப்பட்ட பூங்காவிற்கு “செம்மொழிப் பூங்கா” என்று பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு முதலமைச்சர் கலைஞர் அளித்த பதில் களும் வருமாறு, கேள்வி: உலகத் தரத்தில் அமைக்கப்பட்டு வரும் தாவரவியல் பூங் காவை சுற்றிப் பார்த்தி ருக்கிறீர்கள். பூங்கா எப்படி இருக்கிறது? பதில்: பூங்கா மிகவும் அழகாக இருக்கிறது. கேள்வி: இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டிற் காக எப்போது திறந்து வைக்கப்படும்? பதில்: பூங்கா அமைக் கும் பணிகள் வேகமாக நடந்து கொண் டிருக் கின்றன. இந்தப் பணி முடிவடைந்ததும் மக்கள் பயன்பாட்டிற் காக திறந்து வைக்கப் படும் என்றார்.
No comments:
Post a Comment