கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, September 29, 2010

ஜெ.வுக்கு மிரட்டல் கடிதம் வந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம்: தமிழக அரசு


அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக வந்த கடிதங்கள் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்ற முடிவு செய்துள்தாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட ஏழு கடிதங்களின் அடிப்படையில், சென்னை நகரக் காவல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் ஆகியோரிடம், ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் ரங்கநாதன் மற்றும் கே.பி. சுனில் ஆகியோர் 28.8.2010, 3.9.2010, 17.9.2010 (இரண்டு கடிதங்கள்) மற்றும் 24.9.2010 (மூன்று கடிதங்கள், இரண்டு புகார்கள்) ஆகிய தேதிகளில் கொடுத்த புகார்களின் பேரில், சென்னை மாநகர் கிண்டி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 506 (ii) ஆகியவற்றின் கீழ் குற்ற எண்கள் 692/2010, 709/2010, 796/2010, 823/2010 மற்றும் 824/2010 ன் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மேற்கண்ட ஐந்து வழக்குகளிலும் சிறப்புத் தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்புத் தனிப் படைகள் மதுரை, தஞ்சை ஆகிய இடங்களுக்குச் சென்று அஞ்சல் நிலைய அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் உள்ளிட்ட 113 பேர்களை இதுவரை விசாரித்துள்ளனர். இக்கடிதங்கள் அனைத்தும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புலன் விசாரணை உயரதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.

இருப்பினும், நேற்று (27 9 2010) எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலான குழுவினர், தலைமைச் செயலாளரையும், உள்துறை முதன்மைச் செயலாளரையும் சந்தித்து, மேலும் கொலை மிரட்டல் விடுத்து மூன்று கடிதங்கள் வந்துள்ளதாகவும், இதுவரை கொடுத்த புகார்களின் மீது காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்த தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமென்றும், அனைத்து வழக்குகளையும் மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் ஒரு மனு அளித்துள்ளனர்.


தமிழகக் காவல் துறை இந்தப் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வந்துள்ள போதிலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களின் தலைமையில் வந்த குழுவினர் அளித்த கோரிக்கையை ஏற்று, இவ்வழக்குகள் அனைத்தையும் மத்திய அரசின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment