கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, September 13, 2010

என்னிடம் ஒரு நிருபர் ஒரு கேள்வி கேட்டார்: மு.க.ஸ்டாலின் பேச்சு


துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாண்டிபஜாரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை திறந்து வைத்து பேசினார்.

அவர்,
’’இன்று சென்னையில் மூன்று இடங்களில் நடைப்பாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகங்களின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமையடைகிறேன். தலைவர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசின் குறிக்கோள் மற்றும் சென்னை மாநகராட்சியின் நோக்கத்தை நிறைவேறுகின்ற இந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.


பாண்டிபஜார், அயனாவரம் மற்றும் ராயபுரம் ஆகிய இடங்களில் இன்று வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பாண்டிபஜார் வணிக வளாகத்தை பொறுத்தவரை மூன்று தளங்களுடன் மொத்தம் 644 கடைகள் 43 ஆயிரத்து 32 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இதில், தியாகராயர் சாலை, சிவபிரகாசம் சாலை, உஸ்மான் சாலை ஆகிய பகுதிகளில் நடைபாதையில் விற்பனை செய்து வந்த 529 வியாபாரிகளுக்கும் மாநகராட்சி அங்காடியில் செயல்பட்டுவந்த 100 வியாபாரிகளுக்கும், 15 குத்தகைதாரர்களுக்கும் ஆக மொத்தம் 644 வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரூ.4 கோடியே 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான வணிக வளாகத்தில் 3 லிப்டுகள், 36 கழிவறைகள், போதுமான அளவில் வாகனம் நிறுத்தும் வசதி என வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அயனாவரம் வணிக வளாகத்தை பொறுத்தவரை மொத்தம் 332 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வணிக வளாகம் ரூ. ஒரு கோடியே 19 லட்சம் செலவில் 16 ஆயிரத்து 400 சதுர அடிப்பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ராயபுரம் வணிக வளாகம், மணியகார சத்திரச்சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக அங்கே, 133 கடைகள் ரூ. 27 லட்சம் செலவில் 17 ஆயிரத்து 200 சதுர அடிப்பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.


மொத்தம் 3 வணிக வளாகங்களும் ரூ. 5 கோடியே 76 லட்சம் செலவில் மொத்தம் 1109 கடைகள் நடைபாதை வியாபாரிகளுக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வணிக வளாகங்களை நடைபாதை வியாபாரிகளும் பொது மக்களும் சிறப்பான வகையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சென்னை மாநகரத்தில் மேயராக நான் இரண்டு முறை பொறுப்பு வகித்து இருக்கிறேன். இரண்டாவது முறை முழுமையாக பொறுப்பாற்ற முடியாமல் என்னிடம் இருந்த பொறுப்பு தட்டிப்பறிக்கப்பட்டது. இன்று காலை என்னிடம் ஒரு பத்திரிகை நிருபர் ஒரு கேள்வி ஒன்றை கேட்டார்.

நீங்கள் மேயராக பொறுப்பேற்ற போது ஒரு உறுதிமொழி-சூளுரை-சபதம் செய்தீர்கள். சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்று குறிப்பிட்டீர்கள்.

அந்த பணியினை முடித்துவிட்டீர்களா? என்று கேட்டார். சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நான் மேயராக பொறுப்பேற்ற போது 50 சதவீதம் முன்னேற்றத்தை கொண்டுவந்தேன்.

தற்போது, 2006 க்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியின் பணி மிக முக்கியமானதாகும். சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் பணி 80 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற நீங்கள் எல்லாம் குறிப்பாக வியாபாரிகள், பொது மக்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் என ஒட்டுமொத்தமாக அனைவரும் செயல்பட்டு மாற்ற வேண்டும்.

சென்னை மக்களின் மனம் அறிந்து, புரிந்து அனைவரும் தங்கள் பணிகளை நிறைவேற்றினால் சென்னையை சிங்கார சென்னையாக விரைவில் மாற்றிவிடலாம். நீங்கள் அனைவரும் சிங்கார சென்னையாக உருவாக்க முழுமனதோடு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டு கொள்கிறேன். நடைபாதை என்பது பொதுமக்கள் நடப்பதற்கானது.

பொது மக்கள் நடைப்பாதையை முறையாக பயன்படுத்தும் வகையிலும், போக்குவரத்து சீர்படும் வகையிலும் நடைபாதை வியாபாரிகளாகிய நீங்கள் எல்லாம் ஒத்துழைத்து வணிக வளாகங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நடைபாதை வியாபாரிகளுக்காக இன்று வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு நீதிமன்ற உத்தரவு காரணமாகும்.

சென்னையின் இதயம் போன்ற இந்த தி.நகர் பகுதியில் விலை மதிக்க முடியாத சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய இந்த மாநகராட்சி இடத்தை வியாபாரிகளுக்காக இந்த இடத்தில் கட்டடங்கள் கட்டி வழங்கி இருக்கின்றோம்.

இந்த நீதிமன்ற தீர்ப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சி வியாபாரிகளின் நலனுக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு அமைந்தவுடன் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் சென்னை மாநகராட்சி இந்த வணிக வளாகங்களை கட்டத் தொடங்கி இன்று திறக்கப்பட்டுள்ளது.

கலைஞர் தலைமையிலான இந்த அரசு எப்போதும் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றத்திற்காக பாடுபடுகின்ற அரசாக இருக்கும். அடித்தட்டு மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 2006 தேர்தலின் போது மக்களுக்கு பல்வேறு உறுதி மொழிகளை கலைஞர் அளித்தார்.

தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் 100 சதவீதம் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அறிவிக்காத பல உன்னத திட்டங்களும் உலகமே வியக்கும் வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், தமிழகத்தில் குடிசைகள் அகற்றி கான்கிரீட் வீடுகள் கட்டும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என தேர்தலின் போது அறிவிக்காத திட்டங்களையும் மக்களின் முன்னேற்றம் கருதி கலைஞர் செயல்படுத்திவருகிறார்.


வரும் 6 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படவுள்ளன. இத்திட்டத்தில் 30 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டு வருகின்ற சனவரி 2011 ஆம் ஆண்டுக்குள் 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் ஏழை, எளிய மக்களுக்கு கட்டித்தரப்படவுள்ளது. வரும் 6 ஆண்டுகளில் இந்த 21 லட்ச வீடுகளும் கட்டி கொடுக்கப்படும். யாருக்கும் எந்த வித சந்தேகமும் வேண்டாம்.

அடுத்து வரும் தேர்தலிலும் தலைவர் கலைஞர் அவர்களே 6 வது முறையாக முதல்வராக பொறுப்புக்கு வருவார். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை நாடகம், கலைஞர் மக்களை ஏமாற்றுகிறார் என்று தவறாக பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

மத்திய அரசின் மூலமாக நடைபெற்றுவரும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்திற்கு மாநில அரசின் பங்குத் தொகையை உயர்த்தி வழங்கி இருப்பவர், இந்தியாவிலேயே கலைஞர் ஒருவர் தான் எந்த மாநில முதலமைச்சரும் மாநிலத்தின் பங்குத் தொகையை இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில் இதுவரை உயர்த்தவில்லை. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீடும் 207 சதுர அடி கொண்டதாகும்.

இதற்கு செலவிடப்படும் தொகை ரூ. 60 ஆயிரம் என்பதை 75 ஆயிரமாக உயர்த்தி வழங்கி இருப்பவரும் தலைவர் கலைஞர் தான். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலத்தலைவர் தா.பாண்டியன் அவர்கள் வேண்டும் என்றே தவறான அரசியல் பிரச்சாரம் செய்கின்றார். இத்திட்டத்தை நிறைவேற்றினால் கலைஞருக்கு மக்களிடம் பெரிய பெயரும், பெருமையும் கிடைத்துவிடும் என்பதால் பொய்யாக விமர்சிக்கின்றார்.

ஆனால், இத்திட்டத்தை தமிழக மக்கள் மனதார வரவேற்கின்றார்கள். இன்று சென்னை மாநகராட்சி எங்கும் பூங்காக்கள் விளையாட்டுத்திடல்கள் மக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சென்னை மாநகராட்சி மூலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மாடம்பாக்கத்தில் 30 ஏக்கர் நிலம், விக்டோரியா பப்பிளிக் ஹால் அருகில் 44 கிரவுண்டு நிலம், அமைந்தகரையில் 6.11 ஏக்கர், கோயம்பேடு ஜெய் நகரில் 3.50 ஏக்கர், பிராட்வே அருகில் 6 கிரவுண்டு, பேசின்பிரிட்ஜ்-ல் 23 கிரவுண்டு, கீழ்பாக்கத்தில் 10 கிரவுண்டு, அண்ணா நகரில் 25, நுங்கம்பாக்கத்தில் 12, சாஸ்த்திரி நகரில் 15.5, வடபழநியில் 31, கிண்டியில் 14.5 கிரவுண்டு என ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டு அதில் பூங்கா விளையாட்டுத் திடல் என பொது மக்களுக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களையும் விரைவில் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இது சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் சரித்திர சாதனையாகும். இந்த முயற்சிக்காக சென்னை மாநகராட்சியை தமிழக அரசின் சார்பில், சென்னை மக்களின் சார்பில் பாராட்டுகிறேன்.

சென்னையில் பலத்திட்டங்கள் பல கோடி ரூபாய் செலவில் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டுவருகிறது. 100 க்கு 100 சிங்காரச் சென்னை என்ற இலக்கை அடைய அனைவரும் ஒன்றுப்பட்டு -ஒத்துழைத்து-செயல்பட வேண்டும். கடந்த 4 வருடங்களில் சென்னை மாநகராட்சி சொத்துவரியை உயர்த்தவில்லை.

நிலுவைத் தொகைகளை வசூலித்தும் வார்டுகளிலேயே சொத்துவரியை செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியும், அதன் மூலம் 2006-07 ல் ரூ.232 கோடியும், 2007-08 ல் 292 கோடியும், 2008-09 ல் ரூ. 324 கோடியும், 2009-10 ல் ரூ. 362 கோடியும், 2010-11 ல் இதுவரை ரூ.112 கோடியும் வசூலித்துள்ளது.

வரியை உயர்த்தாமல், பொது மக்களை கசக்கி பிழியாமல் நிலுவைத் தொகைகளை வசூலித்து சென்னை மாநகராட்சி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பொது மக்களுக்கு தேவையான பணிகளை நிறைவேற்றி, மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரும் இந்த ஆட்சிக்கு நீங்கள் எல்லாம் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்று பேசினார்.


No comments:

Post a Comment