கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, September 28, 2010

தஞ்சை கோயில் 1000ம் ஆண்டு நிறைவு விழா சோழர் வரலாற்று கண்காட்சி - முதல்வர் ரசித்து பார்த்தார்



தஞ்சை அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோழர் கால வரலாற்று கண்காட்சியை முதல்வர் கருணாநிதி 26.09.2010 அன்று காலை பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார்.
முற்கால சோழர் ஆட்சி முறை குறித்த தகவல்கள், கோயில் பராமரிப்பு பணிகள் குறித்த விவரம், சோழர்கால தானிய உறை ஆகியவை குறித்து காப்பக அலுவலர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
பின்னர் புறநானூறு, திருக்கோவை, திருமுருகாற்றுப்படை, நன்னூல், கம்பராமாயணம், பெரியபுராணம், நளவெண்பா, சீவக சிந்தாமணி உள்ளிட்ட இலக்கியங்களின் ஓலைச்சுவடிகளையும், சோழர்கால செப்பேடுகள், எசலாம் செப்பேடுகள், பராந்தக சோழனின் வேலஞ்சேரி செப்பேடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து இந்திராகாந்தி தேசிய கலை நிறுவனத்தினர் வைத்திருந்த பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில் மாதிரிகளையும், 11, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ஓவியங்கள், கும்பகோணம், கவின் கலைக்கல்லூரி மாணவர்களின் ராஜராஜசோழன் குறித்த ஓவியங்கள், சோழர் கால நாணயங்கள் ஆகியவற்றையும் அவர் ரசித்து பார்த்தார்.
அதேபோல் சங்கீத மகாலில் அமைக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட அரிய வகை ஐம்பொன் சிலைகளின் வரலாறு குறித்தும் தொல்லியல்துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி விளக்கினார். பின்னர், நாகசாமி எழுதிய சோழர் ஈந்த கவின்மிகு கலைகள் என்ற நூலையும், பிரகதீஸ்வரர் உருவும் கருத்தும் என்ற நூலையும் முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
அப்போது துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ராசா, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், மாநில அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு, தங்கம்தென்னரசு, சுரேஷ்ராஜன், பொங்கலூர் பழனிச்சாமி, எம்பிக்கள் கனிமொழி, செல்வகணபதி, தமிழக பாஜக பொது செயலாளர் இல.கணேசன், தலைமை செயலர் மாலதி, சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, கலைபண்பாட்டுத்துறை இயக்குநர் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இசைக்க வைத்து ரசித்த முதல்வர்
இசைக்கருவிகள் அரங்கில் வைக்கப்பட்டிருந்த பஞ்சமுக இசைக்கருவிகள், கல் தவில், நாதஸ்வரத்தை பார்வையிட்ட முதல்வர் கருணாநிதி, அந்த கருவிகளை இசைக்கக்கூறி சிறிது நேரம் கேட்டு ரசித்தார். பின்னர், சோழர்காலப் போர்க்கருவிகளையும், தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொல்பொருள் சார்ந்த வெளியீடுகளையும் பார்வையிட்டார். மொத்தம் 1 மணி நேரம் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார்.

No comments:

Post a Comment