காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைகளை நேரில் கண்டறிந்து அதன் அடிப்படையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்கு அனைத்துக்கட்சி குழு இன்று காஷ்மீர் சென்றுள்ளது.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில், பாரதீய ஜனதா தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சரத்யாதவ் (ஐக்கிய ஜனதாதளம்), ராஜ்நிதி பிரசாத் (ராஷ்டிரீய ஜனதாதளம்), பாசுதேவ் ஆச்சார்யா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்டு), டி.ஆர்.பாலு (தி.மு.க.), தம்பிதுரை (அ.தி.மு.க.) திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) உள்ளிட்ட 38 பேர் கொண்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர்.
காஷ்மீர் பயணத்துக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு,
போராடிக்கொண்டிருக்கின்ற மக்களை அழைத்து கலந்துரையாடி, அவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேசி, அந்த தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்காக குழு அமைக்கப்பட வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக ஏற்றுக்கொண்டு, அனைத்துக் கட்சி குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு காஷ்மீர் மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறது. அதேபோல் நாளை ஜம்மு பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து மத்திய அரசுக்கு அறிக்கையாக தரப்படும். மத்திய அரசு இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கும் என்றார்.
No comments:
Post a Comment