கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, September 14, 2010

தி.மு.க. பேச்சாளர்களுக்கு ஊட்டியில் 2 நாள் பயிற்சி


திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக இளம் சொற்பொழிவாளர்கள் பயிற்சி பட்டறை 16, 17 தேதிகளில் நீலகிரி மாவட்டம் உதகையில் நடக்க உள்ளது. மத்திய அமைச்சர் ஆ.ராசா வரவேற்றுப் பேசுகிறார். துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் துவக்க உரை நிகழ்த்துகிறார்.

16ம் தேதி காலை 11 மணிக்கு திராவிட இயக்க வரலாறு குறித்து கோவை மு.ராமநாதன் பேசுகிறார். 12 மணிக்கு திராவிட இயக்கமும், பெண்ணுரிமையும் என்ற தலைப்பில் வழக்கறிஞர் அருள்மொழியும், மாலை 4 மணிக்கு கருணாநிதி உருவாக்கிய சமூக புரட்சி ( திட்டங்கள்) குறித்து அமைச்சர் பொன்முடியும் பேசுகின்றனர். 17ம் தேதி காலை 10 மணிக்கு சமூக நீதி (இட ஒதுக்கீடு) என்ற தலைப்பில் பேராசிரியர் நெடுஞ்செழியனும், 11 மணிக்கு திராவிட இயக்கமும், பொதுவுடமையும் என்ற தலைப்பில் விடுதலைவிரும்பியும், 12 மணிக்கு கடவுள், மதம், சாதி (திராவிட இயக்க பார்வை) என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியனும் பேசுகின்றனர். மாலை 4 மணிக்கு மொழிபோர் வரலாறு என்ற தலைப்பில் அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார்.
நிகழ்ச்சியை திருச்சி சிவா எம்.பி., பரமத்தி சண்முகம், நெல்லிக்குப்பம் புகழேந்தி, குடியாத்தம் குமரன் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

No comments:

Post a Comment