கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 2, 2011

திமுக இளைஞரணி அறக்கட்டளை ஸி31 லட்சம் பரிசு : 10, 12&ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அன்பழகன் வழங்கினார்



பிளஸ் 2 மற்றும் 10&ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ரூ.31 லட்சம் பரிசுத் தொகையை மு.க.ஸ்டாலின் தலைமையில் க.அன்பழகன் வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12&ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் 02.07.2011 அன்று காலை நடந்தது. திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். மேயர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான அன்பழகன், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:
பரிசு வழங்கும் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் நான் இளைஞன் ஆகியிருக்கிறேன். இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு ஏணிப்படியே கல்விதான். கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு இந்த விழா நடத்தப்படுகிறது.
தினமும் 5, 6 மைல் நடந்து சென்று பள்ளிக்கு சென்றவர் அவர். ஏடு, நூல்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு 13 வயதில் ஆற்றல்மிக்க எழுத்தாளராக திகழ்ந்தார். அது அவரே தேடிக்கொண்ட அறிவாற்றல். அதே வழியில் நீங்களும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உயர்ந்த நிலையை அடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக துணை அமைப்பான இளைஞர் அணி சார்பில் இந்த விழா நடக்கிறது. மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது. 2007&ம் ஆண்டு இளைஞர் அணி மாநில மாநாடு நெல்லையில் நடந்தது. மாநாட்டு தீர்மானத்தின்படி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, மாநாட்டு செலவு போக மீதியிருந்த தொகையை வைப்பு நிதியில் செலுத்தப்பட்டது. அதில் கிடைக்கும் வட்டி தொகையில் ஆண்டுதோறும் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறோம்.
இந்த ஆண்டு 12&ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 6 மாணவ, மாணவிகள், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 140 பேர், 10&ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 40 பேர், மாவட்ட அளவில் 227 பேர் என மொத்தம் 523 பேருக்கு ரூ.31 லட்சத்து 52 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 1,193 பேருக்கு ரூ.70 லட்சத்து 97 ஆயிரம் வழங்கி உள்ளோம்.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்குகிறோம். கடந்த ஆண்டு 1,443 பேருக்கு ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆயிரத்து 111 பேருக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 34 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களு டன் வந்து இந்த பரிசு களை பெற்றுக் கொண் டனர். தமிழ்நாடு முழுவ தும் இருந்து மாணவர் கள் கலந்துகொண்ட தால் விழா நடைபெற்ற கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தது.

விழாவுக்கு, வந்திருந் தவர்களை மேயர் மா. சுப்பிரமணியன் வர வேற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தி.மு.க. இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் சுக வனம், ராஜேந்திரன், சம்பத், சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, சற்குணபாண்டி யன், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வீரபாண்டி ஆறுமுகம், திருச்சி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அன்பில் பெரியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மாணவ, மாணவிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment