கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

வாக்குறுதியை நிறைவேற்றியதால் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கிறோம் - மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்


திமுக கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியிருப்பதால் நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் வாக்கு கேட்கிறோம் என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யசோதாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மாங்காடு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி இருப்பதால் நாங்கள் தலை நிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் வாக்கு கேட்கிறோம். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி, டிவி, இலவச காஸ், வீட்டு மனைப்பட்டா, நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் என சொன்னதை செய்தது. ஆனால், அறிக்கையில் சொல்லாத கலைஞர் காப்பீடு திட்டம், 108 ஆம்புலன்ஸ், ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. கடந்த தேர்தல் அறிக்கையை கிண்டல் செய்தவர்கள் இந்த முறை ”ஈ” அடித்தான் காப்பி அடிப்பதைப்போல் காப்பி அடித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள சில அரசியல் விமர்சகர்கள், தங்களை படித்த மேதாவியாக காட்டிக் கொள்ளும் ஒரு சிலர், 5 ஆண்டுகள் முதல்வராக இருந்த பின்பு தொடர்ந்து அடுத்த முறை முதல்வராக முடியாது என்கின்றனர்.
டில்லியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலாதீட்சித், ஒரிசாவில் நவீன்பட்நாயக், அசாமில் தருங்கோகாய் ஆகியோர் எப்படி தொடர்ந்து முதலமைச்சராக ஆனார்களோ, அதே போல் கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார்.
மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் 8.5% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி பயிலும் உரிமை சட்டம், வேலை வாய்ப்பளிக்கும் உரிமை சட்டம் ஆகிய மூன்றையும் இயற்றி மாறாத சரித்திரம் படைத்த மத்திய அரசு, விவசாயிகளுக்கான கடன் ரூ.72 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், படப்பை ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன், மாங்காடு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் உள்பட கூட்டணி கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment