கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இல்லத்தில் பாதுகாப்பு போலீஸ் திடீர் வாபஸ்



மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் திடீரென்று வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரானது முதல் மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மதுரை சத்தியசாயி நகரிலுள்ள அவரது இல்லத்திற்கு ரோட்டில் இருந்து கார் மற்றும் வாகனங்கள் செல்லும் வகையில் இரு வழிகள் உள்ளன. அமைச்சர் அழகிரியை சந்திக்க பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அதிக அளவில் வருவார்கள் என்பதால், இல்லத்திற்கு செல்லும் இரு நுழைவு வாயில்களிலும் வீட்டின் முன்னும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதற்காக அங்கு போலீசாருக்கு தனி கூண்டு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் சப்&இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நிறுத்தப்பட்டனர்.
சுமார் 2 ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு இருந்தது. 31.03.2011 அன்று மாலை திடீரென்று இந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு, 3 இடங்களிலும் இருந்த போலீசார் வெளியேறினர். போலீஸ் கூண்டில் போலீசார் இல்லாமல் காலியாக கிடந்தது.
தேர்தல் ஆணைய ஆலோசனைபடி மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் அழகிரி தென் மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். 31.03.2011 அன்று அவர் தேர்தல் பணியாக வெளியூர் சென்றிருந்த வேளையில் அவரது இல்லத்தில் போலீசார் பாதுகாப்பு வாபஸ் பெற்றது பரபரப்பை உண்டாக்கியது.
தனது இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியதாவது:
வேண்டுமென்றே ஏதோ சதிசெய்து பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் எனது உயிருக்கோ, உடைமைக்கோ எந்தவித ஆபத்து நேர்ந்தாலும் அதற்கு தேர்தல் கமிஷன், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை காவல்துறை ஆணையாளர் ஆகிய மூவரும் தான் முழு பொறுப்பு.
என்னுடைய தேர்தல் பணியை முடக்கும் நோக்கு டன் வேண்டுமென்றே நான் சுற்றுப்பயணத்தில் இருக்கும்போது 31.03.2011 அன்று மதியம் எந்த முன்அறிவிப்பும் இல்லாமல் போலீஸ் பாது காப்பை வாபஸ் பெற்றது அராஜகமான செயலாகும். அதுமட்டுமின்றி காவல்துறை ஆணையாளரே ஒரு போலீஸ் வேனை அனுப்பி எனது வீட்டில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாரை உடனே வரச்சொல்லி மிரட்டியுள்ளார். வராவிட்டால் சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
நான் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது என்னு டைய காரை நிறுத்தி சோதனை என்ற பெயரில் அத்துமீறி அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நான் ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சருக்கு தந்தி கொடுத்துள்ளேன்.
மாவட்ட தேர்தல் அதிகாரியான மதுரை கலெக்டர் சகாயம், “ஆட்சி மாற்றம் வேண்டும்“ என பேசியதை நான் வெளியிட்டேன். அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. இதை மனதில் வைத்து திட்டமிட்டு உள்நோக்குடன் என் இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்றது உள்ளிட்ட பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. இக்கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

No comments:

Post a Comment