கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 4, 2011

தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரம்






சர்ச்சையை ஏற்படுத்தும் தேர்தல் ஆணைய உத்தரவுகள் - மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு :

தேர்தல் ஆணைய உத்தரவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றன என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் மானமதுரையில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் தமிழரசியை அறிமுகப்படுத்தி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
கடந்த திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதில் 100 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டுத்தான் தற்போது திமுக கூட்டணி தேர்தலை சந்திக்க வந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களும் சாத்தியமானவைதான். தற்போது தேர்தல் ஆணைய உத்தரவுகள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. சில அதிகாரிகள் தவறான நடைமுறைகளை சுட்டிக் காட்டு கின்றனர்.
நகராட்சிகள், பேரூராட்சிகளில் மட்டும்தான் சுவர் விளம்பரத்திற்கு தடை. ஊராட்சிகளில் சுவர் விளம்பரங்களை செய்யலாம். பூத் சிலிப் கொடுப்பதற்கு கூட கட்டுப்பாடு. சின்னத்துடன் பூத் சிலிப் கொடுப்பது வழக்கமான ஒன்று. இதற்கு தடை விதிக்கின்றனர்.
துண்டு பிரசுரத்துடன் சின்னம் இருக்கலாம் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள். ஆனால் வாக்குப்பதிவின்போது கொடுக்கப்படும் பூத் சிலிப்பில் சின்னம் இருக்க கூடாதாம். இது என்ன நடைமுறை என்றே தெரியவில்லை.
திமுக கூட்டணி வலுவான கூட்டணி. கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம். இரு கூட்டணி கட்சிகளையும் தராசில் வைத்தால், நாம் இருக்கும் கூட்டணிதான் கீழே போகும். அவ்வளவு வலுவான கூட்டணி நம்முடைய கூட்டணி.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக தேர்தல் அறிக்கை பொதுமக்கள் நம்பவில்லை - ஜி.கே.வாசன் பேட்டி :

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுமக்கள் நம்பவில்லை என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கபிஸ்தலத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,‘ மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை. நடைபெறவுள்ள தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்‘ என்றார்.
பின்னர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராம்குமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் வாசன் பிரசாரம் செய்தார். அங்கு நகர தேமுதிக செயலாளர் சங்கர் தலைமையில் 250 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, ஜி.கே.வாசன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களை மத்திய அமைச்சர் வாசன் வரவேற்று பேசினார்.

எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் தான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை - சோழிங்கநல்லூரில் திருமாவளவன் பேச்சு :
சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜியை ஆதரித்து, பனையூர், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, நீலாங்கரை, பாலவாக்கம், பெருங்குடி, ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகர், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திறந்த வேனில் வீதிவீதியாக சென்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஆறாவது முறையாக கருணாநிதியை அரியணையில் ஏற்றுவோம். தமிழகத்தை ஆளும் தகுதி அவருக்குத் தான் உண்டு. உழைக்கும் மக்களுக்காக சிந்தித்து செயல்படக் கூடிய தலைவர். தமிழக மக்களுக்காக தனது வாழ்க்கை யை அர்ப்பணித்துக் கொண்டனர்.
அனுபவம் மிக்கவர், நல்ல திட்டங்களை மக்களுக்கு தந்துள்ளார். ஆனால், ஜெயலலிதாவின் சாதனை, 30 வயது நபரை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து, கோடி கோடியாக செலவிட்டு நகைக்கடை மாதிரி நடந்து சென்றனர். அவர் 2 முறை ஆட்சி செய்த சாதனை இதுதான். கருணாநிதி, வைகோ, நெடுமாறன், என்னை சிறையில் அடைத்தார். மக்களுக்காக அவர் எதுவும் செய்யவில்லை. அரசு ஊழியர்களை எஸ்மா, டெஸ்மா சட்டம் கொண்டு வந்து வாட்டி வதைத்தார். மக்களுக்காக எதையும் செய்யாமல் எப்படி ஓட்டு கேட்பார்? கருணாநிதியை குறை கூறி சத்தம் போடுகிறார்.
இங்கே கருணாநிதியை முதல்வராக்குவோம் என்கிறோம். அங்கே யார் முதல்வர் என்பதில் போட்டா போட்டி, அவர்களுக்குள் நம்பிக்கையில்லாத நிலை உள்ளது. எனவே திமுக ஆட்சி மீண்டும் மலர இங்கு மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

உங்கள் பிள்ளைகளை மாடு மேய்க்க வைக்க அதிமுக திட்டம் - அன்புமணி ராமதாஸ் பேச்சு :

உங்கள் பிள்ளைகளை மாடு மேய்க்க வைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கருணாநிதி 6வது முறையாக முதலமைச்சராக வந்தால் தான் சாதனை திட்டங்கள் தொடரும். இந்த கூட்டணி சாதனையின் அடிப்படையில் அமைந்த சமூக நீதி கூட்டணி. அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி சினிமா கூட்டணி. தி.மு.க. ஆட்சியில் மாணவர்களுக்கு வாரம் 5 முட்டை, இலவச சீருடை, இலவச சைக்கிள், இலவச பஸ்பாஸ் என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்வி கடன்களை ரத்து செய்வதாகவும் மாணவர்களுக்கு இலவச லேப்&டாப் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆடு, மாடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலம், காலமாக ஆடு, மாடு மேய்த்த நாம் இப்போது தான் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி வருகிறோம். ஆனால் உங்கள் பிள்ளைகளை மீண்டும் ஆடு, மாடு மேய்க்க அனுப்ப அவர்கள் திட்டமிடுகிறார்கள். இதை வாக்காளர்கள் அனைவரும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திமுகவை விவசாயிகள் ஆதரிக்க வேண்டும் - உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் பேட்டி :

விவசாயிகள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் பேட்டியளித்தார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் திமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து மடத்துக்குளம் பேரூராட்சி, கொழுமம், குமரலிங்கம், கணியூர், காரத்தொழுவு, குறிச்சி கோட்டை, தளி, வாளவாடி, தேவனூர்புதூர், எரசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த தேர்தலில் எங்களது கோரிக்கையை ஏற்று இலவச மின்சாரம் வழங்கியதோடு, 7ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக்கடனையும் திமுக அரசு தள்ளுபடி செய்தது. தென்னை விவசாயிகளின் நலனை காப்பதற்காக தென்னை நலவாரியம் அமைத்ததோடு, சத்துணவு கூடங்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும் உத்தரவிட்டது.
தற்போது சொட்டுநீர்பாசனத்திற்கு 90 சதவீத மானியம் வழங்கப்படும். காய்கறிகளை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு, விளைபொருட்களுக்கு விலைநிர்ணம் செய்ய கமிட்டி அமைத்து கொடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். இதனால் திமுக அரசு அமைய விவசாயிகள் ஆதரவு அளிக்க வேண்டும். தொடர்ந்து 6வது முறையாக முதல்வர் கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்பார்.
இவ்வாறு செல்லமுத்து கூறினார்.

விஜயகாந்த் தொண்டர்களை அடித்தே விரட்டி விடுவார் - திருநாவுக்கரசர் பேச்சு :

பிரசாரம் செய்வதற்குள் தொண்டர்களை அடித்தே விரட்டி விடுவார் என முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் தமிழரசியை ஆதரித்து திருப்புவனத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் பேசியதாவது:
திமுக கூட்டணி பலமான கூட்டணி. அதிமுக கூட்டணி பலகீனமான கூட்டணி. அதிமுகவில் இருந்து முத்துச்சாமி, சின்னச்சாமி போன்றோர் விலகி விட்டனர். வைகோ கூட்டணியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். அதிமுகவுக்கு பிரசாரம் செய்ய ஆள் இல்லை. விஜயகாந்த் பிரசாரம் செய்யும் இடங்களில் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால், அவர் தொண்டர்களை அடித்தே விரட்டி விடுவார் போல் தெரிகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்கு வங்கியே கிடையாது.
திமுக கூட்டணியை பொறுத்தவரையில், 5 ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்களால் திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ், வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க பாமக, விடுதலை சிறுத்தைகள் என பலமான கூட்டணியாக உள்ளது. மானாமதுரை திமுக வேட்பாளர் தமிழரசியை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.
முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் ரவி உடன் வந்தனர். முன்னதாக, திருப்புவனம் வந்த அவருக்கு திமுக ஒன்றிய செயலாளர் சேங்கை மாறன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மின் தட்டுப்பாட்டுக்கு ஜெயலலிதாவே காரணம் - கி.வீரமணி குற்றச்சாட்டு :

தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு நிலவுவதற்கு ஜெயலலிதாவே காரணம் என்று தி.க. தலைவர் கி.வீரமணி பேசினார்.
பாளை தொகுதி திமுக வேட்பாளர் மைதீன்கானை ஆதரித்து தி.க. சார்பில் ஜவகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் வீரமணி பேசியதாவது:
தேர்தல் அறிக்கையில் சொல்லாத நலத்திட்டங்களையும் மக்களுக்காக செயல்படுத்தியவர் முதல்வர் கருணாநிதி. அரசு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்து ஏழை மாணவ, மாணவிகள் கல்வி கற்க உதவினார்.
ஏழைகளின் உயிரை காப்பாற்ற இலவச 108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை கருணாநிதி பெற்றுள்ளார். அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா போட்ட ஒரு கையெழுத்து மூலம் ஒரே நாள் இரவில் 1 லட்சத்து 77 ஆயிரம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். கூட்டணி கட்சியினரை ஜெயலலிதா அவமானப்படுத்தினார். தாய் உள்ளம் கொண்ட கருணாநிதி, மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.
மின் தட்டுப்பாட்டுக்கு ஜெயலலிதாவே முழுக்க முழுக்க காரணம். அவரது ஆட்சி காலத்தில் புதிய மின் நிலையங்களை அமைக்கவோ அல்லது அதற்கான திட்டங்களையோ அவர் செயல்படுத்தவில்லை.
இவ்வாறு வீரமணி பேசினார்.



No comments:

Post a Comment