கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 4, 2011

40 வேட்பாளர்களும் சேர்ந்து விஜயகாந்துக்கு வைப்பாய்ங்க ஆப்பு -


“தேர்தல் முடிஞ்சதும், அவரது கட்சியிலே 40 வேட்பாளர்களும் தோத்துப்போன ஆத்திரத்தில் விஜயகாந்த்க்கு வைக்க போறாய்ங்க பெரிய ஆப்பு...” என்று நடிகர் வடிவேலு கலகலப்பாக பேசியதை கேட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மதுரை மேற்கு தொகுதியில் நடிகர் வடிவேலு தி.மு.க. வேட்பாளர் தளபதியை ஆதரித்து பைகாரா, பழங்காநத்தம், மாடக்குளம் ஆகிய இடங்களில் 03.04.2011 அன்று மதியம் பிரசாரம் செய்தார். கொளுத்தும் வெயிலில் வியர்வை சொட்டச் சொட்ட திறந்த வேனில் தெரு தெருவாக அவர் வந்தார்.
இதில் நடிகர் வடிவேலு பேசியதாவது:
அடேங்கப்பா... கொளுத்துற வெயில்ல என்னே ஆரவாரம். மகிழ்ச்சி. பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து இருக்கிறீர்கள். இந்த ஆரவாரத்தை 13ம் தேதி தேர்தலில் காட்டி கலைஞர் அய்யா முதல்வராக வாக்களிக்கணும்.
நான் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து உங்களை சிரிக்க வைக்கிறேன். கலைஞர் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச டிவி கொடுத்து, மக்கள் தேவைகளை நிறைவேற்றி சிரிக்க வைக்கிறார். அடுத்து கிரைண்டர், மிக்சி உங்கள் வீடு தேடி வரப் போகுது. கலைஞர் சொன்னதை செய்வார்.
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் ஸீ6 ஆயிரத்தைஸீ10 ஆயிரமாக்கி அறிவித்துள்ளார். குழந்தை கரு உண்டானதும் மாதம் ஸீ1000 கிடைக்க போகுது. பிறக்கிற குழந்தை அழுது கொண்டே பிறக்கிறது. இனிமேல் புலிகேசி மாதிரி சிரித்துக் கொண்டே பிறக்க போகிறது. (சிரித்து காட்டினார்.)
58 வயதான பெரியவங்க பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம். முதியவர்களை நாடி மருத்துவமனையே வீடு தேடி வரப்போகிறது.
இப்படி இலவச திட்டங்களை அள்ளி இறைத்துள்ளார். இதை காப்பி அடித்து நானும் இலவசங்கள் தருகிறேன் என்று அந்த அம்மா சொல்வது சும்மா... கலைஞர் வரும் என்றால், வரும். ஜெயலலிதா வரும்னு சொன்னா... (வராது.... என மக்கள் கோஷம்).
கருப்பு எம்.ஜி.ஆர்.னு ஒருத்தர் சுத்திக்கிட்டு இருக்காரு. அவர் முகரக்கட்டைக்கு கருப்பு எம்.ஜி. ஆராம்? கலைஞரை ஒழிக்க போகிறாராம். உன்னை அரசியலில் இருந்து இந்த தேர்தலில் மக்களே ஒழித்து கட்டுவார்கள். கேப்டனாம். கிரிக்கெட்டில் உலக கோப்பை பெற்ற தோனி கேப்டன். நீ எப்படி கேப்டனாக முடியும்? நீ கேப்டன்னா....நான் டாப்டென்.
சொந்த கட்சி வேட்பாளரை அடித்தார். அதற்கு பிறகு அவரது கட்சி வேட்பாளர் ஒருவரிடம் “உன் பெயர் என்ன என்று கேட்டுள்ளார். அந்த வேட்பாளர் “பெயரெல்லாம் வேண்டாம்ணே... நீங்க மாத்தி சொல்லி, நான் சரி செய்தா... அடிப்பீங்க... எதுக்குனே வம்பு...“ என்று சொல்லி பயப்பட்டுள்ளார். மக்கள் முன் அடிப்பதால் 40 வேட்பாளர்களும் அவருடன் வேனில் நிற்க அஞ்சி, குமுறிக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தலில் தோற்றதும் ஆத்திரம் தாங்காமல் 40 பேரும் சேர்ந்து விஜயகாந்துக்கு வைப்பாய்ங்க பெரிய்யய... ஆப்பு. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆப்பு வைக்க தயாராயிட்டாங்க.... கலைஞரை 6&வது முறையாக முதல்வராக்க தயாராயிட்டாங்க.
இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.

வடி வேலுவின் பேச்சை கேட்க பொதுமக்கள் திரண்டி ருந்தனர். வழிநெடுகிலும் அவருக்கு சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment