தமிழக சட்டமன்ற தேர்தலில் இரு நூற்றுக்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என திமுக கூட்டணி கட்சி சார்பில் நடந்த ஊழியர் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசினார்.
ராமநாதபுரத்தில் காங் கிரஸ் வேட்பாளர் ஹசன்அலியை ஆதரித்து திமுக கூட்டணி சார்பில் ஊழியர் கூட்டம் 31.03.2011 அன்று நடந்தது. இக்கூட்டத்தில் திமுக தென்மண்டல அமைப்புச் செய லாளர் மத்திய அமைச்சர் அழகிரி பேசியதாவது:
கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழக முதல்வர் சொன்னதை செய்துள்ளார். அவர் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கிச்சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீடு திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந் தால், திமுக அரசு வழங்கிய திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என்பதையும் மறக்காமல் எடுத்து சொல்லுங்கள்.
கருணாநிதி தொடங்கிய பல நலத்திட்டங்களை பொறாமையில் நிறுத்தியவர் ஜெயலலிதா. அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதற்காக ஏழைப்பெண்களுக்கு வழங்கிய திருமண உதவி திட்டத்தையும் நிறுத்தியவர் ஜெயலலிதா என்பதனையும் மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.
கிரைண்டர், மிக்ஸி வழங்கப்படும் என்ற திமு கவின் தேர்தல் அறிக்கையை கிராமம்தோறும் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். 58 வயது நிறைவடைந்த முதியோர் தமிழகத்தில் எங்கும் இலவசமாக செல்ல அரசு பஸ் பாஸ் வழங்கும் திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்கு மீண் டும் முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்கூற வேண்டும்.
டெல்லியில் நானும், மத் திய அமைச்சர் தயாநிதிமாறனும் சோனியாகாந்தியை சந்தித்து கூட்டணி குறித்து பேசி தீர்வு கண்டதை நீங் கள் அறிவீர்கள். கருத்தொற்றுமையுடன் அனைவரும் அயராது கூட்டணி வெற்றிக் காக பாடுபடவேண்டும். கருணாநிதி தான் திமுக என்ற உணர்வோடு நாம் செயல்பட்டு கூட்டணி வேட்பாளர் ஹசன்அலியை 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யவேண்டும்.
மக்களுடன் கூட்டணி என்று கூறிய நடிகர் விஜயகாந்த் தற்போது ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துள்ளார். அவர் ராத்திரியில் ஒன்று, பகலில் ஒன்று பேசு கிறார். அவருடன் சென்ற வேட்பாளருக்கே என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். அவரை சட்டமன்றத்திற்கு தினம் குடித்துவிட்டு வருகிறார் என்று சொன்னவர்தான் ஜெயலலிதா. அவர்கள் கூட்டணி எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாததல்ல. 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் அதில் ராமநாதபுரம் தொகுதியும் ஒன் றாக இருக்க வேண்டும். தமிழகத்தில் கருணாநிதி தலை மையில் ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இவ்வாறு அவர் பேசி னார்.
மதுரை துணை மேயர் மன்னன், முன்னாள் எம்.பி., பவானிராஜேந்திரன், நகர் தி.மு.க செயலாளர் ரத்தினம், மாவட்ட காங்கிரஸ் தலை வர் ரவிச்சந்திர ராமவன்னி, முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் ஷாஜகான் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment