கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ராமநாதபுரம் பெருமாள் கோயில் மைதானத்தில் 31.04.2011 அன்று நடந்தது. நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
நாட்டில், நமக்கு எதிரான சக்தி அன்று முதல் இன்று வரை இருக்கிறது. அப்போதுள்ள கட்சி நேரடியாக மோதியது. ஆனால், இப்போதுள்ள கட்சி வஞ்சகமாக மோதுகிறது. ஜெயலலிதா தமிழுக்கு செய்த தொண்டு என்ன? அவரோடு கூட்டு சேர்ந்துள்ள நடிகர் விஜயகாந்த் செய்த சாதனை என்ன? 5 ஆண்டுகளாக அவர்களுடன் இருந்த வைகோவை தூக்கி வீசி விட்டார்கள். நாங்கள் யாரையும் அலட்சியப்படுத்த மாட்டோம்.
பாம்பு, கீரியை வைத்து கிராமத்தில் வித்தை காட்டுவார்கள். அதுபோல், தேர்தல் கமிஷன் செயல் படுகிறது. ஓட்டுபெட்டியை பாதுகாக்க ஒரு மாதம் செலவிடுகிறார்கள். மக்கள் பணத்தை வீணாக செலவு செய்கிறார்கள்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,450 கோடி இழப்பு ஏற்படுகிறது என முதல்வரிடம் தெரிவித்தேன். அடித்தட்டு மக்கள் பயன்பெறுவதால் இந்த இழப்பை தாங்குவோம் என்றார் கருணாநிதி.
விவசாயிகள் வேதனையை தீர்க்க ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்ததால் தமிழ்நாட்டில் தற்கொலை சாவு தடுக்கப்பட்டுள்ளது. தொழில் வளத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரமாக இருந்தது தற்போது ரூ.65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உள்ளாட்சிதுறையில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்தான்.
தமிழகம் முழுவதும் புது எழுச்சி உருவாகியுள்ளது. மக்கள் நலனை நாடும் நல்லாட்சி தொடர திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். கருணாநிதியை 6வது முறையாக முதல்வராக்குங்கள்.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
No comments:
Post a Comment