ஈரோடு தேமுதிக முன்னாள் மாவட்ட செயலாளர் லோகநாதன் அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் இணைந்தார்.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளதற்கு ஈரோடு மாவட்ட தேமுதிக செயலாளர் லோகநாதன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், அக்கட்சியில் இருந்து விலகிய லோகநாதன் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் ஈரோட்டில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜா, முன்னாள் அமைச்சர் என்கேகே.பெரியசாமி,ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் சு.முத்துசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment