பணிகள், திட்டங்கள் தொடர மீண்டும் திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டு கொளத்தூர் தொகுதியில் வீதிவீதியாக இன்று ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின், 02.04.2011 அன்று காலை 7.40 மணிக்கு கொளத்தூர் அண்ணா சிலை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
செங்குன்றம் சாலை வழியாக வேலன் நகர், பாலாஜி நகர், அம்பேத்கர் நகர் குடிசை பகுதி, நேர்மை நகர், திருப்பதி நகர், தனமாள் நகர், ஸ்ரீநகர் காலனி, யுனைடெட் காலனி, லட்சுமி அம்மன் கோயில் தெரு, கங்கா திரையரங்கம், கிழக்கு மாடவீதி, மகாத்மா காந்தி நகர், காந்தி தெரு, காயிதே மில்லத் தெரு, ஜீவா தெரு, லட்சுமி நகர், அனுசுயா நகர், எம்ஜிஆர் நகர், தென்பழனி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் ஜீப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரெட்டேரி, பூம்புகார் நகர், வீனஸ் நகர், தென்பழனி நகர் ஆகிய இடங்களில் தேர்தல் பணிமனையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
லட்சுமிபுரம் ரெட்டேரி, தென்பழனி நகர் ஆகிய இடங்களில் ஸ்டாலின் பேசியதிலிருந்து:
முதல்வர் கருணாநிதி, 6&வது முறையாக மீண்டும் முதல்வராவார். தேர்தலுக்கு மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் உங்களை தேடி, நாடி வருபவர்கள் நாங்கள். சோனியா, ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோர் அடங்கிய வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம். ஆனால் எதிரணியில் அமைத்துள்ள ஜெயலலிதா, தேர்தல் முடிந்தவுடன் கோடநாடுக்கு ஓடி விடுவார். ஒரு நடிகர் சினிமாவில் கதாநாயகனாவும், இப்போது வில்லனாகவும் மாறியுள்ளார். வேட்பாளருக்கு அடி விழுகிறது. (அங்கிருந்த மக்கள் குடிகார அணி என்று கோஷமிட்டனர்). அவருடன் இருக்கும் வேட்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனிமேல் நீங்கள் ஹெல்மெட் அணிந்து பிரசாரத்துக்கு செல்லுங்கள்.
ஜெயலலிதா, தனது தேர்தல் பிரசாரத்தின்போது கூட்டணி கட்சி வேட்பாளர்களின் பெயர்களைகூட சொல்வதில்லை. கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு நிறைவேற்றி உள்ளோம். எனவே 6&வது முறையாக கருணாநிதியை அரியணையில் அமர வைப்போம். கொளத்தூர் தொகுதியில் நானும், மாதவரம் தொகுதியில் டாக்டர் கனிமொழியும் போட்டியிடுகிறோம். இந்த கனிமொழி வேறு யாருமில்லை. கழகத்தின் நாடி நரம்பாக இருந்த என்.வி.என்.நடராஜனின் பேத்தியும், முன்னாள் அமைச்சர் என்.வி.என்.சோமுவின் மகள்தான் அவர். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தேடி தாருங்கள். தேர்தல் அறிக்கையில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அனைத்தையும் உறுதியுடன் நிறைவேற்றக் கூடியவர் நமது முதல்வர் கருணாநிதி. அதை நிச்சயம் நிறைவேற்றி தருவார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
தென்பழனி நகரில் பேசும்போது, “உங்களுடைய உபசரிப்பு, தேர்தலில் நான் பிரசாரம் செய்ய வந்ததுபோல் இல்லை. இப்போதே நான் வெற்றி பெற்றுவிட்டது போன்ற மகிழ்ச்சியுடன் உங்கள் முன் நிற்கிறேன். பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர மீண்டும் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என்றார்.
வழி நெடுகிலும் ஏராளமானோர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடித்தும், மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் வெற்றி திலகமிட்டு வரவேற்றனர். ரெட்டேரி, வீனஸ் நகரில் 2 குழந்தைகளுக்கு செங்குட்டுவன், கண்மணி என பெயர் சூட்டினார்.
கொளத்தூர் கங்கா தியேட்டர் அருகே கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள், மு.க.ஸ்டாலினை பார்த்ததும் ஓடி வந்து கையசைத்து வரவேற்றனர். கொளத்தூர் பொது நலச்சங்க நிர்வாகிகளும் சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.
பிரசாரத்தின்போது துர்கா ஸ்டாலின், மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு, பகுதி செயலாளர் வி.எஸ்.ரவி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, வட்ட செயலாளர் லெனின் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
பிரசாரத்தின்போது துர்கா ஸ்டாலின், மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு, பகுதி செயலாளர் வி.எஸ்.ரவி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, வட்ட செயலாளர் லெனின் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment