ஜெயலலிதா, விஜயகாந்தை பார்த்து மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வேடசந்து£ரில் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் காங்கிரஸ் வேட்பாளர் தண்டபாணி அறிமுக கூட்டம் நடந்தது. அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை வகித்தார். முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் வரவேற்றார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேசியதாவது:
இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் நடக¢கின்ற தேர்தல். வைகோ திமுகவை விட்டு போனார். அவரை ஜெயலலிதா சிறையில் அடைத்தார். ஆனால் கருணாநிதி நம்மை எதிர்த்தவர் என்று நினைக்காமல் சிறையில் சென்று அவரை பார்த்தார். வைகோ சிறையில் இருந்து வந்தவுடன் 6மாதத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். நாடெல்லாம் சுற்றி வெற்றியை தேடித்தந்தவர் வைகோ என்று ஜெயலலிதாவே பாராட்டினார். ஆனால் அவருக்கு அதிமுகவில் 8இடம் மட்டுமே தர முடியும் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பின்னர் வைகோ ஏமாந்து வெளியேறி தேர்தலை புறக¢கணிக¢க போவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் நிற்க முடியவில்லையே என்று மதிமுக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். வைகோ திமுகவை விட்டு வெளியேறியதற்கு காரணம் நாம் திமுகவிற்கு தலைவராக முடியவில்லையே என்பது தான். தலைவர் பதவி முதல்வருக்கு மட்டும் தான். அதற்கு காரணம் அவர் செய்யும் மக¢கள் தொண்டு.
கட்சி ஆரம்பித்த சில நாட்களில் நான்தான் அடுத்த முதல்வர் என்று ஒரு நடிகர் கூறினார். நான் கருப்பு எம் ஜிஆர் என்றும் கூறு கிறார். கடவுளோடு கூட் டணி என்று கூறியவர் இன் றைக¢கு ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்துள்ளார். நடிகர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தின் போது வேட் பாளர் ஒருவரை அடித் தார்.
எதற்காக அடித்தார் என்று விசாரித்த போது பெயரை தவறுதலாக கூறிவிட்டதால் அடித்தார் என்றார்கள். அவரை அக¢கட்சியினர் கேப்டன் என்று கூறுவார்களாம். இதற்கு நடிகர் வடிவேல் தண்ணீரில் ஓடும் கப்பலுக¢கு கேப்டனா அல்லது தரையில் ஓடும் கப்பலுக¢கு கேப்டனா என்று கேட்டுள்ளார்.
ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரை பார்த்து மக¢கள் ஏமாந்து விட மாட்டார்கள்.
கடந்த 5ஆண்டு கால திமுக ஆட்சியில் பல சாதனைகள் செய்யப்பட்டுள் ளன. குறிப்பாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மக¢களிடம் ளீ150கோடி பணப்புழக¢கம் ஏற்பட்டுள்ளதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் நல்ஆட்சி நடப்பது தான் காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட ஊராட்சிக¢குழு தலைவர் கவிதா பார்த்திபன், திமுக மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரியம் எஸ்.நட ராஜன், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன், எரியோடு பேரூ ராட்சி தலைவர் மஞ்சுளா, நகர செயலாளர்கள் எரியோடு ஜீவா, வேடசந்தூர் அன்வர்அலி, வடமதுரை ஒன்றிய செயலாளர் ராயல் என்ற சின்னான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாவட்ட ஊராட்சிக¢குழு தலைவர் கவிதா பார்த்திபன், திமுக மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரியம் எஸ்.நட ராஜன், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன், எரியோடு பேரூ ராட்சி தலைவர் மஞ்சுளா, நகர செயலாளர்கள் எரியோடு ஜீவா, வேடசந்தூர் அன்வர்அலி, வடமதுரை ஒன்றிய செயலாளர் ராயல் என்ற சின்னான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment